குரலழகி பிரியங்கா கணவர் வசி ஈழத்தமிழர் ஆ! பிரியங்காவின் ரசிகர்கள் மகிழ்ச்சி.


பிரியங்காவின் அம்மாதான், மகளின் எதிர்காலம் நினைத்து கவலைப்பட்டு, திருமணம் செய்து கொள்ளும்படி கட்டாயப்படுத்தி வந்துள்ளார்.. அம்மாவின் பேச்சை தட்ட முடியாமல் பிரியங்காவும் ஒப்புக் கொண்டுள்ளார். பிரியங்கா திருமணம் செய்துள்ள வசி என்பவர் ஈழத்தமிழர்.. லண்டனில் புகழ்பெற்ற இசைக்குழு வைத்திருக்கிறார் என்று மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் தெரிவித்துள்ளார்.. அத்துடன், விஜய் குறித்தும் சில முக்கிய தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

இந்நிலையில், BBT Cinema என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ளார் தமிழா தமிழா பாண்டியன். அதில், விஜய் டிவி பிரியங்காவின் 2வது திருமணம் குறித்து பேசியிருக்கிறார்.. பிரியங்கா திருமணம் செய்துள்ள வசி என்பவர் ஈழத்தமிழராம்.. இவர் லண்டனில் குடியிருந்து வருவதால், பிரியங்காவும் திருமணத்துக்கு பிறகு லண்டன் சென்று தங்கிவிடுவாரா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு தமிழா தமிழா பாண்டியன் மீண்டும் விஜய் பற்றி பேசி பதில் தந்துள்ளார்..

வசி ஒரு ஈழத்தமிழர்.. லண்டனில் வசித்து வருகிறார்.. லண்டனிலேயே அவருக்கு குடும்பம் உள்ளது.. இசைக்குழுவை லண்டனில் வைத்து நடத்தி வருகிறார்.. வசியின் அண்ணனும் இதே இசைக்குழுவில்தான் உள்ளார

ஐரோப்பாவிலேயே மிகவும் பிரபலமானது இவர்களின் இசைக்குழு.. அதற்காக பிரியங்கா திருமணத்துக்க பிறகு லண்டனில் செட்டில் ஆகிவிடுவாரா என்று சொல்ல முடியாது.

சரிகமபா ரசிகர்கள் நெகிழ்ச்சி யோகசிறி உச்ச மகிழ்ச்சி.


ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வெற்றிகரமான சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அப்படி வெற்றிகரமாக ஓடும் ரியாலிட்டி ஷோக்கள் என்றால் சரிகமப மற்றும் டான்ஸ் ஜோடி டான்ஸ் தான். சரிகமப லில் சாம்ஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது, டான்ஸ் ஜோடி டான்ஸ் பரபரப்பின் உச்சமாக சென்று கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் சன் மற்றும் விஜய் தொலைக்காட்சிகளில் சீரியல்களின் மகா சங்கமம் நடந்து வந்ததை பார்த்திருப்போம். தற்போது ஜீ தமிழில் இரண்டு ரியாலிட்டி ஷோக்களின் மகா சங்கமம் நடந்துள்ளது.


அதில் ஒரு சரிகமப போட்டியாளர் மனம் நெகிழும் வகையில் ஒரு சந்தோஷ விஷயம் செய்துள்ளார் நடிகை சினேகா. இதுநாள் தனது காது குத்தவில்லை என சரிகமப போட்டியாளர் கூற ஒரு அக்கா இடத்தில் இருந்து சிறப்பாக செய்துள்ளார் சினேகா. இதோ வீடியோ,

தமன்னாவுக்கே சாக் கொடுக்கும் பூஜா ஹெக்டா

 


கோலிவுட் முதல் பாலிவுட் வரை கலக்கிக்கொண்டிருக்கும் நடிகை பூஜா ஹெக்டே நடிப்பில் அடுத்ததாக தமிழில் ரெட்ரோ படம் வெளிவரவுள்ளது. திரைப்படம் டிக்கெட் முன்பதிவு

இப்படத்திலிருந்து வெளிவந்த ஒரு பாடலுக்கு பூஜா ஆடிய நடனம் அனைவரையும் கவர்ந்தது. குறிப்பாக அவர் போட்ட ஸ்டப் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரெட்ரோ படத்தை தொடர்ந்து பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ஜனநாயகன். பீஸ்ட் படத்திற்கு பின் மீண்டும் இப்படத்தில் தளபதி விஜய்யுடன் இணைந்து நடித்து வருகிறார்.

இந்நிலையில், பேட்டி ஒன்றில் பூஜா ஹெக்டே கூலி படம் குறித்து பேசிய விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதில், "கூலி படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடி இருக்கிறேன்.

ரஜினிகாந்த் சார் உடன் பணியாற்றிய அனுபவம் எனக்கு மிகவும் ஸ்பெஷல். இந்த படத்தில் நான் ஆடிய பாடல் தமன்னாவின் காவாலா பாடல் போன்று இருக்காது, முற்றிலும் வேறு விதமான வைபில் இருக்கும் நிச்சயம் ரசிகர்கள் இதை என்ஜாய் செய்வார்கள்" என்று தெரிவித்துள்ளார்.

அழகிய தேவதை அச்சு அசல் தாயைப்போல் முதல் முதலில் வெளியானது புகைப்படம்.


விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி தொடருக்கு ரசிகர்களின் ஆதரவு பெரிய அளவில் உள்ளது. கொரோனா நேரத்தில் சில புதுமுகங்களும், நாம் பார்த்து பழகிய சில நடிகர்களும் நடிக்க இந்த தொடர் ஒளிபரப்பாக தொடங்கியது.ஸ்ரீமோயி என்ற தொடரின் ரீமேக்காக ஒளிபரப்பான இந்த தொடர் 2025, இந்த வருடத்தில் முடிவுக்கு வரப்போவதாக ஒரு தகவல் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.

ரித்திகா


பாக்கியலட்சுமி தொடரில் அமிர்தா கதாபாத்திரத்தில் முதலில் நாயகியாக நடித்து வந்தவர் நடிகை ரித்திகா.இவர் தொடரில் இருந்து பாதியிலேயே வெளியேறிவிட்டார். பின் திருமணம் செய்து கொண்டவருக்கு ஒரு மகளும் உள்ளார், இதுநாள் வரை தனது

தற்போது இளைஞர்கள் மனதை கிறங்கடிக்கும் நடிகை திரிஷாவுக்கு போட்டியாக இவரா!

 


சென்னை: "அஜித்தின் குட் பேட் அக்லி படத்தில் சர்ச்சை கிளம்பியிருக்கிறது.. வயதுதான் திரிஷாவுக்கு பிரச்னையாக மாறியிருக்கிறது. 50 வயதை தொட்டு விடக்கூடிய நடிகையாக இருந்தாலும் இன்னும் இந்த பீல்டில் நிலைத்து நிற்க கூடியவர் திரிஷா.. லேடி சூப்பர் ஸ்டார் யார் என்பதில்தான், நயன்தாராவுக்கும், திரிஷாவுக்கும் போட்டியாக இருந்து வருகிறது" என்று பத்திரிகையாளர் பாண்டியன் கூறியிருக்கிறார்.

1999-ம் ஆண்டு மிஸ் சென்னையாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் திரிஷா.. ஆரம்ப காலத்தில் தமிழ் சினிமாவில் துணை கதாபாத்திரங்களில் தான் நடித்திருந்தார். 2002-ம் ஆண்டு அமீர் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான மௌனம் பேசியதே திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து அவர் நடித்த சாமி, கில்லி, ஆறு போன்ற அடுத்தடுத்த அவரை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது. 40 வயதை கடந்தும், திரைத்துறையில் ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்து வரும் திரிஷா, தமிழ், தெலுங்கு, மலையாள திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வருகிறார். குறிப்பாக பொன்னியின் செல்வன் படத்துக்கு பிறகு திரிஷாவின் மார்க்கெட் , டாப்பில் எகிறிவிட்டது.. விஜய், அஜித் என டாப் ஸ்டார்களுடன் தொடர்ந்தும், அதிகமாகவும் நடித்து வருகிறார்.

அந்தவகையில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார், திரிஷா நடித்துள்ள "குட் பேட் அக்லி" படம், உலகம் முழுவதும் வெளியாகி, திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த படம் வெளியானதிலிருந்தே பாக்ஸ் ஆபிஸில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.. ரூ.270-300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம், இதுவரை ரூ.63 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக சாக்னில்க் தெரிவித்துள்ளது.

இந்த படத்துக்கு ரசிகர்கள் வரவேற்பு கொடுக்கும் அதேவேளையில், எதிர்மறையான விமர்சனங்களும் எழுந்து வருகிறது. அதாவது, சில மாதங்களுக்கு முன்பு, குட் பேட் அக்லி படத்தில் திரிஷாவின் கேரக்டர் மிக மிக முக்கியமானது என்றும், கதைக்கு திரிஷாவின கதாபாத்திரம் தான் முக்கிய புள்ளியாக அமையப் போகிறது என்றும் தகவல்கள் றெக்கை கட்டி பறந்தன.

அதுமட்டுமல்ல இந்த படத்தின் கதையை அஜித்தே த்ரிஷாவிடம் சொன்னதாகவும் திரிஷாவின் கேரக்டரையும் அஜித் தான் அவரிடம் விளக்கியிருப்பதாகவும் ஆதிக் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். ஆனால், தற்போது படத்தில் திரிஷாவின் கேரக்டர் உப்புக்கு சப்பாக உள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

வழக்கமாக சோஷியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இருந்து வரும் திரிஷா, தற்போது கோபமான பதிவை பதிவிட்டுள்ளார்.. தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில், ''விஷத்தன்மை கொண்ட நபர்களே... நீங்கள் எல்லாம் எப்படி வாழ்க்கையை வாழ்கிறீர்கள்? எப்படி நன்றாக தூங்குகிறீர்கள்? சமூக வலைதளங்களில் மற்றவர்களைப் பற்றி அர்த்தமற்றவற்றைப் பதிவிடுவது உங்களுக்கு உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கிறதா?

உங்களுக்காகவும், உங்களுடன் வாழும் நபர்களுக்காகவும் உண்மையில் மிகவும் வருத்தப்படுகிறேன். பெயர் தெரியாத கோழைகளே... கடவுள் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக...'' என்று குறிப்பிட்டுள்ளார். கடந்த சில நாட்களாக த்ரிஷாவிற்கு திருமணம் முடிந்து விட்டது என பரவிய புதிய செய்திக்கு த்ரிஷா கொடுத்த பதிலடியாக இது இருக்கலாம் என அவருடைய ரசிகர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

இந்நிலையில், BBT Cinema என்ற யூடியூப் சேனலுக்கு மூத்த பத்திரிகையாளர் தமிழக தமிழா பாண்டியன் பேட்டி தந்துள்ளார்.. அதில், "திரிஷாவை பொறுத்தவரை, 23 வருடங்களாக சினிமாவில் ஆளுமையாக இருக்கிறார் .. திரைப்படத்துக்கு வருவதற்கு முன்பு "வெல்கம் கேர்ள்ஸ்" எனப்படும் வரவேற்பாளராக இருந்தார் திரிஷா.. இதற்கு பிறகுதான் சினிமாவுக்குள் நுழைந்தார்.

வசதியான வீட்டு பெண் தோற்றமுள்ளதால், குரூப் டான்ஸில் ஆடினார்.. அப்போது இதற்கு ஒருநாளைக்கு 2 ஆயிரம் ரூபாய் சம்பளம்.... பிறகு ஒரு தயாரிப்பாளர் கண்ணில் திரிஷா பட்ட பிறகுதான், மௌனம் பேசியதே படத்தில் வாய்ப்பு வருகிறது.. அந்த பட தயாரிப்பாளர், புதுமுகமான திரிஷாவுக்கு வாய்ப்பு தந்ததுமே, அவருடன் நெருக்கமாக திரிஷா இருப்பதாக, அந்த காலத்திலேயே ஏராளமான கிசகிசுக்கள் வலம்வந்தன.. 

பிளஸ் 2 முடிக்கும்போது யாராக இருந்தாலும் அவர்களுக்கு 18 வயதாகியிருக்கும்.. பிறகு 3 வருடம் கல்லூரி படிப்பு என்றால் 21 வயதாகிவிடும். 21 வயதில இருந்து 23 வயதுவரை சினிமாவில் சின்ன சின்ன ரோல்கள், வெல்கம் கேர்ள்ஸ் என்று வருடங்கள் கழிந்தது.. பிறகு 23 வயதிலிருந்து தான் ஹீரோயினாக நடிக்க துவங்கினார் திரிஷா..

இப்போது அவர் ஹீரோயினாக நடிக்க வந்தே 23 வருடமாகிவிட்டது. அப்படியானால், இப்போது 46 அல்லது 47 வயதாகிறது திரிஷாவுக்கு. ஆனால் எப்போது கேட்டாலும், 41 வயது என்றுதான் சொல்வார். வயது ஒரு பிரச்சனை இல்லை என்றாலும்கூட, சர்ச்சைக்குரிய நாயகியாகவே திரிஷா இருந்து வருகிறார்.

காதல் முறிவு. வருண் மணியன் என்ற தொழிலபதிபருடன் திரிஷா நெருக்கமாக இருந்தார். திரிஷாவை விட, வருண் மணியனுக்கு 6 வயது குறைவாகும்.. இவரை திரிஷா திருமணம் செய்ய போவதாக செய்திகளும் அப்போது வெளியாகின.. இருவரும் பல்வேறு ஊர்களுக்கு சென்று வந்தனர்.. ஹெலிகாப்டரில் இமயமலைக்கும் சென்றுவந்தார்கள். ஆனால், இந்த காதல் நிறைவேறாமலேயே போய்விட்டது. அதனால் அவரை விட்டு பிரிந்தார் திரிஷா. இன்றும் தமிழ் திரைப்படங்களில் தவிர்கக முடியாத நாயகியாக வலம்வருகிறார் .

இப்போது மீண்டும் அஜித்தின் குட் பேட் அக்லி படத்தில் சர்ச்சை கிளம்பியிருக்கிறது.. வயதுதான் திரிஷாவுக்கு பிரச்னையாக மாறியிருக்கிறது. 50 வயதை தொட்டுவிடக்கூடிய நடிகையாக இருந்தாலும் இன்னும் இந்த பீல்டில் நிலைத்து நிற்க கூடியவர் திரிஷா.. லேடி சூப்பர் ஸ்டார் யார் என்பதில்தான், நயன்தாராவுக்கும், திரிஷாவுக்கும் போட்டியாக இருந்து வருகிறது.

சோஷியல் மீடியா போட்டி பாலக்காட்டு பிராமின் திரிஷா என்றால், கேரளாவை சேர்ந்த நாயர் நயன்தாரா.. இந்த இரு கேரள நடிகைகளுக்குதான் பயங்கரமான போட்டி.. இந்த போட்டியில் விஜய் ரசிகர்கள், திரிஷாவை சப்போர்ட் செய்கிறார்கள். அஜித் ரசிகர்கள் நயன்தாராவை சப்போர்ட் செய்கிறார்கள்.. இது இப்போது சமூகவலைதள சண்டையாகவும் மாறிவிட்டது. விஜய் கட்சியில் திரிஷா பதவிக்கு வருவதாகவும் கமெண்ட்களை பதிவிட்டு வருகிறார்கள்..

இதற்குதான் திரிஷா ரியாக்‌ஷன் செய்துள்ளார்.. இதனால் விளம்பரம் கிடைக்கும் என்று நினைக்கிறார். தன்னை பற்றின கிசுகிசு வரவேண்டும் என்பதே திரிஷா, நயன்தாரா போன்றோரின் விருப்பம்.. 50 வயதை எட்டும் திரிஷாவுக்கு இன்னும் திருமணம் இல்லை. ஆனால், பல்லாயிரம் கோடி பணம் இருக்கிறது.. தன் அப்பாவை கூட திரிஷா கவனித்து கொள்வதில்லையாம்.. அம்மா, மகளுக்கு எதுக்கு இத்தனை கோடி? " என்றெல்லாம் அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.

ஏமாற்றப்பட்ட பிரபல நடிகரின் தற்போதைய பரிதாபநிலை.


சென்னை: வழக்கு எண் 18/9, மாநகரம் போன்ற ஹிட் திரைப்படங்களில் நடித்த நடிகர் ஸ்ரீ தற்போது உடல் எடை மெலிந்து, எலும்பும் தோலுமாக அடையாளமே தெரியாதபடி இருக்கிறார். இணையத்தில் வெளியான இந்த போட்டோவை பார்த்த இணையவாசிகள் அவருக்கு என்ன ஆச்சு என கவலையோடு கேட்டு வருகின்றனர். 2006ம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் என்ற தொடரின் மூலம் பிரபலமானவர்தான் நடிகர் ஸ்ரீ. 


பள்ளிக்கூட சம்பவங்களை வைத்து எடுக்கப்பட்ட இந்த, கனா காணும் காலங்கள் இளைஞர்களை கவரும் வகையில் இருந்தது. இதன் மூலம் பிரபலமான ஸ்ரீ, பாலாஜி சக்திவேல் எழுதி இயக்கி வழக்கு எண் 18/9 படத்தில் வேலு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் நடித்ததற்காக அவருக்கு விஜய் டிவி சிறந்த அறிமுக நடிகருக்கான விருதை கொடுத்தது. "Maanagaram Shri: என்னை சுற்றி நடந்த பிரச்சனை.. சினிமாவே வேண்டாம்.. ஸ்ரீயின் பழைய பேட்டி!" நடிகர் ஸ்ரீ: அந்த திரைப்படத்தை தொடர்ந்து ஓநாயும் ஆட்டுக்குட்டியும்,சோன் பப்டி, வில் அம்பு, மாநகரம் என வருடத்திற்கு ஒரு படம் என்ற கணக்கில் நடித்தார். 

2017ம் ஆண்டு வெளியான மாநகரம் திரைப்படம் இயக்குநர் லோகேஷ் கனகராஜின் முதல் திரைப்படமாகும். அந்த படத்தில் சந்தீப் கிஷன், ஸ்ரீ, ரெஜினா கெஸன்ட்ரா ஆகியோர் நடித்திருந்தனர். இதில் ஸ்ரீக்கு நல்ல கதாபாத்திரம் கொடுக்கப்பட்டு இருந்தது. மிகப்பெரிய அளவில் வெற்றியை பெற்ற இந்த படம் இந்தியில் ரீ மேக் செய்யப்பட்டு மும்பைக்கார் என்ற பெயரில் வெளியானது. மாநகரம் என்ற வெற்றி படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த ஸ்ரீக்கு சினிமாவில் பெரிய வாய்ப்பு இருக்கும் என எதிர்பார்த்த நிலையில், அவர் படத்திலும் கமிட் ஆகவில்லை. இது தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். ஆனால், போட்டி தொடங்கிய நான்கு நாட்களிலேயே, எனக்கு இதெல்லாம் செட்டாகி என்று தனிப்பட்ட காரணத்தை சொல்லி ஸ்ரீ அந்த போட்டியிலிருந்து வெளியேறினார். இதைத் தொடர்ந்து ஸ்ரீ கடைசியாக இறுகப்பற்று படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் இவரின் கதாபாத்திரம் நன்றகாக பேசப்பட்டது. அதன் பிறகு ஸ்ரீ என்ன ஆனார்... எங்கே போனார் என்றே தெரியாமல் இருந்தது. " ஸ்ரீ எங்கே இருக்கானே தெரியல.. ஃபோனை எடுக்கல.. அவன் ரொம்ப பாவம்..தோழி கதறல்!" ரசிகர்கள் அதிர்ச்சி: இந்நிலையில் நடிகர் ஸ்ரீ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எலும்பும் தோலுமாக இருக்கும் போட்டோவை பார்த்த இணையவாசிகள் பலரும் அதிர்ச்சி அடைந்து. ஸ்ரீக்கு என்ன ஆச்சு என்றும், அடையாளமே தெரியவில்லையே என கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

 இன்ஸ்டாகிராமில் அவர் தொடர்ந்து, காலை உணவு, மதிய உணவு, இரவு உணவு என சமைத்து சாப்பிடுவதை பதிவிட்டு இருக்கிறார். இந்த போட்டோவை பார்க்கும் போது, ஒரு சிறிய அறையில் தான் நடிகர் ஸ்ரீ இருக்கிறார் என்று தெரிகிறது. மேலும், அவர் தலைமுறையை கலரிங் செய்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதைப்பார்க்கும் போது அவருக்கு மனரீதியாக ஏதோ பிரச்சனை இருக்கிறது என்பது தெரிகிறது. இதனால் இணையத்தில் பலர் என்ன ப்ரோ இப்படி ஆகிட்டீங்க, என்ன ஆச்சு மருத்துவரை பாருங்கள் என அவருக்கு அறிவுரை கூறி வருகின்றனர். அழகான, திறமையான நடிகர் ஸ்ரீக்கு இப்படி ஒரு நிலைமையா என பலர் கேட்டு வருகின்றனர். 

மாநகரம் ஸ்ரீக்கும் குடும்பத்துக்கும் தொடர்பில்லை.. நிறைய ஏமாத்திட்டாங்க.. உறவினர் கொடுத்த விளக்கம் ஸ்ரீ எவ்வளவு நல்லவர் தெரியுமா?.. அவர் என்ன பண்றாருனு யாருக்கும் தெரியாது.. பிரபல நடிகை ஓபன் டாக் மாநகரம் ஸ்ரீக்கு வந்த நிலைமை.. மனசு உடைந்துப்போன ரசிகர்கள்.. ஆபாச மெசேஜ்களை பார்த்தாலே பதறுதே! பாவாடையை இழுத்து படு கேவலமாக ஆடுன ஆட்டத்துக்கு சென்சார்.. வெளியானது அதீத சர்ப்ரைஸ் வீடியோ பாடல்! பிரசாந்த் மாதிரி ஒரு அழகனை பார்த்தது இல்லை.. கறுப்பா இருந்தால் ரிஜெக்ட்.. ரோஜா சொன்ன சீக்ரெட்

மாரடைப்பால் இறந்தாரா பிரபாகரன்! பிரபலங்கள் அதிர்ச்சியில்.


நடிகர் பிரபாகரன் பனி விழும் மலர் வானம், காயம், கெட்டி மேளம் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து வந்தவர் நடிகர் பிரபாகரன். இவர், கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக சின்னத்திரை நாடகங்களில் நடித்து வருகிறார்.

சென்னை முகலிவாக்கத்தில் வசித்து வந்த பிரபாகரன், கடந்த ஏப்ரல் 10 ம் தேதி சீரியல் ஷூட்டிங் முடித்து விட்டு வந்ததும், இரவு உறங்க சென்றுள்ளார். அப்போது அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், குடும்பத்தினர் பிரபாகரனை பக்கத்திலுள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

அங்கு அவரை பரிசோத்தித்து பார்த்த மருத்துவர்கள் நடிகர் பிரபாகரன் உயிர் பிரிந்ததை உறுதி செய்துள்ளனர். திடீர் மாரடைப்பால் இவருடைய மரணம் நிகழ்ந்துள்ளது. இவருக்கு தற்போது வயது 62. மறைந்த நடிகர் பிரபாகரனுக்கு மனைவியும் ஒரு மகளும் உள்ளனர். மகள் 10 வது படித்து வருகிறார் என்றும் கூறப்படுகிறது.


இவருடைய மரணம் சின்னத்திரையுலகத்தில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளதுடன் பிரபலங்கள் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.