தனக்கே கட்டிய கல்லறையில் அடக்கம் செய்யப்பட்ட பிரபல நடிகர்! சோகத்தில் மூழ்கிய திரையுலகம்


மாரடைப்பால் காலமான நடிகர் ராஜேஷின் உடல் சென்னை, கீழ்ப்பாக்கத்தில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் அவரது பெற்றோர், மனைவி அடக்கம் செய்யப்பட்ட கல்லறையிலேயே அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவின் மூத்த நடிகரான ராஜேஷ், 75. 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் மாரடைப்பால் திடீரென நேற்று முன்தினம் காலமானார். இவரது மறைவு திரையுலகினர் இடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. சென்னை, ராமாபுரத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட அவரது உடலுக்கு முதல்வர் ஸ்டாலின்,  உள்ளிட்ட பல திரைப்பிரபலங்களும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

ராஜேஷின் மகள் கனடாவில் இருந்து இன்று அதிகாலை தான் சென்னை திரும்பினார். பிரபலங்கள் அஞ்சலிக்கு பின் இறுதி அஞ்சலி சென்னை அசோக் நகரில் உள்ள தேவாலயத்தில் நடந்தது. இதையடுத்து மாலை 3 மணிக்கு மேல் ராஜேஷின் உடல் கீழ்ப்பாக்கத்தில் உள்ள கல்லறை தோட்டத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு அவரது பெற்றோர், மனைவி கல்லறை அமைந்துள்ள இடத்திலேயே ராஜேஷின் உடலும் நல்லடக்கம் செய்யப்பட்டது.

முன்னதாக ராஜேஷ், உயிரோடு இருக்கும் போதே தனக்கான கல்லறையை கட்டி வைத்திருந்தார். தனது உடல் அடக்கம் இப்படிதான் நடக்க வேண்டும் என கூறியிருந்தார். அதன்படியே அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

தமன்னாவுக்கே சாக் கொடுக்கும் பூஜா ஹெக்டா

 


கோலிவுட் முதல் பாலிவுட் வரை கலக்கிக்கொண்டிருக்கும் நடிகை பூஜா ஹெக்டே நடிப்பில் அடுத்ததாக தமிழில் ரெட்ரோ படம் வெளிவரவுள்ளது. திரைப்படம் டிக்கெட் முன்பதிவு

இப்படத்திலிருந்து வெளிவந்த ஒரு பாடலுக்கு பூஜா ஆடிய நடனம் அனைவரையும் கவர்ந்தது. குறிப்பாக அவர் போட்ட ஸ்டப் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரெட்ரோ படத்தை தொடர்ந்து பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ஜனநாயகன். பீஸ்ட் படத்திற்கு பின் மீண்டும் இப்படத்தில் தளபதி விஜய்யுடன் இணைந்து நடித்து வருகிறார்.

இந்நிலையில், பேட்டி ஒன்றில் பூஜா ஹெக்டே கூலி படம் குறித்து பேசிய விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதில், "கூலி படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடி இருக்கிறேன்.

ரஜினிகாந்த் சார் உடன் பணியாற்றிய அனுபவம் எனக்கு மிகவும் ஸ்பெஷல். இந்த படத்தில் நான் ஆடிய பாடல் தமன்னாவின் காவாலா பாடல் போன்று இருக்காது, முற்றிலும் வேறு விதமான வைபில் இருக்கும் நிச்சயம் ரசிகர்கள் இதை என்ஜாய் செய்வார்கள்" என்று தெரிவித்துள்ளார்.

அழகிய தேவதை அச்சு அசல் தாயைப்போல் முதல் முதலில் வெளியானது புகைப்படம்.


விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி தொடருக்கு ரசிகர்களின் ஆதரவு பெரிய அளவில் உள்ளது. கொரோனா நேரத்தில் சில புதுமுகங்களும், நாம் பார்த்து பழகிய சில நடிகர்களும் நடிக்க இந்த தொடர் ஒளிபரப்பாக தொடங்கியது.ஸ்ரீமோயி என்ற தொடரின் ரீமேக்காக ஒளிபரப்பான இந்த தொடர் 2025, இந்த வருடத்தில் முடிவுக்கு வரப்போவதாக ஒரு தகவல் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.

ரித்திகா


பாக்கியலட்சுமி தொடரில் அமிர்தா கதாபாத்திரத்தில் முதலில் நாயகியாக நடித்து வந்தவர் நடிகை ரித்திகா.இவர் தொடரில் இருந்து பாதியிலேயே வெளியேறிவிட்டார். பின் திருமணம் செய்து கொண்டவருக்கு ஒரு மகளும் உள்ளார், இதுநாள் வரை தனது

ஸ்ருதி விடயத்தில் இதுதான் நடந்தது-வெளியான பகீர் தகவல்..!

 

தமிழ் சின்னத்திரையில் சமீபத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவங்களில் ஒன்று, விஜய் டிவியின் பிரபல சீரியலான சிறகடிக்க ஆசை தொடரில் வித்யா கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை ஸ்ருதி நாராயணனைச் சுற்றிய அந்தரங்க வீடியோ சர்ச்சை. 


இணையத்தில் வெளியாகி வைரலான இந்த வீடியோ உண்மையா, பொய்யா என்கிற விவாதம் ஒருபுறம் நடக்க, இதுகுறித்து சக சீரியல் நடிகை ரிஹானா யூட்யூப் சேனலில் அளித்த பேட்டி தற்போது பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. 

ரிஹானாவின் இந்த பேட்டி, ஸ்ருதி நாராயணனின் விவகாரத்தை மட்டுமல்லாமல், சின்னத்திரை நடிகைகள் எதிர்கொள்ளும் சவால்களையும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. 

ரிஹானா, ஸ்ருதி நாராயணனை தனிப்பட்ட முறையில் நன்கு அறிந்தவர் என்பதால், இந்த விவகாரத்தில் தனது பார்வையை தெளிவாக பதிவு செய்துள்ளார். "ஸ்ருதியை நான் நேரில் பார்த்திருக்கிறேன். அவருக்கு பெரிய நெத்தி உள்ளது. 

ஆனால், வீடியோவில் காட்டப்படும் பெண்ணின் நெத்தி சிறியதாக உள்ளது. அதனால், இது ஏஐ (செயற்கை நுண்ணறிவு) தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட வீடியோ என்று உறுதியாக சொல்ல முடியும். இது உண்மையான வீடியோ அல்ல," என்று அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார். 

இதன் மூலம், ஸ்ருதி நாராயணனை ஆதரிக்கும் வகையில் அவர் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார். 

தொடர்ந்து பேசிய ரிஹானா, தனது ஆரம்ப கால அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார். "நான் சீரியல் துறையில் புதிதாக அறிமுகமானபோது, எனக்கும் இதுபோன்ற தொலைபேசி அழைப்புகள் வந்தன. ஆனால், நான் அதை தவிர்த்துவிட்டேன். என் தோழி ஒருவருக்கும் இதேபோல அழைப்பு வந்தது. அவரிடம் என்னிடம் கேட்ட அதே கேள்விகளை கேட்டிருக்கிறார்கள்," என்று அவர் குறிப்பிட்டார். 

இதன் மூலம், சின்னத்திரையில் பிரபலமாக வேண்டும் என்ற ஆசையை பயன்படுத்தி சிலர் பெண்களை சிக்க வைப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

ரிஹானா மேலும் கூறுகையில், "எப்படியாவது சீரியலில் ஜெயிக்க வேண்டும், பிரபலமாக வேண்டும், வாழ்க்கையில் செட்டில் ஆக வேண்டும் என்று நினைக்கும் பெண்களைத்தான் இவர்கள் குறிவைக்கிறார்கள். 

தங்கள் வாழ்க்கையை முன்னேற்றிக்கொள்ள எந்த அளவுக்கும் இறங்கக்கூடிய மனநிலையில் இருக்கும் பெண்களை கண்டறிந்து, அவர்களை நாசப்படுத்த ஒரு பெரிய கும்பல் சுற்றுகிறது," என்று எச்சரிக்கை விடுத்தார். இது, சின்னத்திரையில் புதிதாக வருபவர்கள் எதிர்கொள்ளும் ஆபத்துகளை தெளிவாக வெளிப்படுத்துகிறது. 

இந்த சர்ச்சையை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு, நடிகைகளுக்கு ரிஹானா சில அறிவுரைகளையும் வழங்கியுள்ளார். "உங்களுக்கு ஒரு சிறிய கதாபாத்திரம் கிடைத்தாலும், அதை ஏற்று நடியுங்கள். உங்கள் திறமையை படக்குழுவினர் பார்ப்பார்கள். 

அதன் மூலம் அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைக்கும். ஆனால், உடனடியாக பெரிய இடத்திற்கு செல்ல வேண்டும் என்று நினைத்து இப்படியான கும்பலிடம் சிக்கிவிடக் கூடாது," என்று அவர் அறிவுறுத்தியுள்ளார். மேலும், "யாராவது உங்களிடம் அத்துமீறினால், அதை எதிர்த்து கேட்கும் தைரியம் இருக்க வேண்டும்," என்று வலியுறுத்தினார். 

ரிஹானா தனது 10 ஆண்டு சின்னத்திரை அனுபவத்தை சுட்டிக்காட்டி, "நான் இந்த துறையில் பத்து ஆண்டுகளாக இருக்கிறேன். என்னிடம் யாரும் இப்படியான விஷயங்களை செய்யவில்லை," என்று கூறி, தைரியமும் விழிப்புணர்வும் இருந்தால் இதுபோன்ற சிக்கல்களை தவிர்க்க முடியும் என்பதை உறுதிப்படுத்தினார். 

ரிஹானாவின் இந்த பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஸ்ருதி நாராயணனுக்கு ஆதரவாகவும், சின்னத்திரையில் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களை வெளிப்படுத்தியதாகவும் ரசிகர்கள் இதை பாராட்டி வருகின்றனர். 

இது ஒரு தனிப்பட்ட சம்பவத்தை தாண்டி, தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துவதாலும், சினிமா துறையில் பெண்களுக்கு ஏற்படும் அநியாயங்களாலும் உருவாகும் பிரச்னைகளை பற்றிய விவாதத்தை தூண்டியுள்ளது. 

ஸ்ருதி நாராயணனின் அந்தரங்க வீடியோ சர்ச்சை, சமூக ஊடகங்களில் தவறான தகவல்கள் பரவுவதையும், பெண்களை இலக்கு வைத்து நடக்கும் துஷ்பிரயோகங்களையும் மீண்டும் ஒருமுறை எடுத்துக்காட்டியுள்ளது. ரிஹானாவின் பேட்டி, இதுபோன்ற சம்பவங்களுக்கு எதிராக தைரியமாக குரல் கொடுப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. 

சின்னத்திரையில் பிரபலமாக வேண்டும் என்று கனவு காணும் இளம் நடிகைகள், தங்கள் திறமையை நம்பி முன்னேற வேண்டும் என்பதே இதன் மூலம் தெரிகிறது. இந்த சம்பவம், தொழில்நுட்பத்தின் இருபக்கங்களையும், துறையில் உள்ள சவால்களையும் நமக்கு நினைவூட்டுகிறது.

புகழ் பெற்ற பிரபல நடிகர் உயிரிழப்பு..!

 

புகழ்பெற்ற நடிகர் ரவிக்குமார் (75) சென்னையில் இன்று காலமானார்.

இந்தியாவின் கேரளத்தின் திரிச்சூரை பூர்வீகமாகக் கொண்ட ரவிக்குமார் சென்னை தனியார் மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று (04) காலை 10 மணியளவில் காலமானார்.

 

இவர், நூற்றுக்கும் மேற்பட்ட மலையாளம், தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் சின்னத்திரை நாடகங்களிலும் இவர் நடித்திருக்கிறார்.

 

இவரது மறைவுக்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

YouTube இல் சாதனை படைத்த நடிகர் விஜய்யின் பாடல்!


அரபிக் குத்து பாடல் youtube-ல் 70 கோடி பார்வைகளை கடந்துள்ளது நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வெளியான பீஸ்ட் திரைப்படம் கலவி ஆன விமர்சனங்களை பெற்றிருந்தாலும் ஓரளவு வெற்றி பெற்றது. 

பீஸ்ட் திரைப்படம் ரசிகர்களை கவரவில்லை என்றாலும் அனிருத்தின் பாடல்கள் அனைத்தும் பெரிய அளவில் வெற்றியை பெற்றன.

குறிப்பாக அரபிக்குத்து உலகளவில் பிரபலமானது. 

அளவில் பிரபலங்கள் பலரும் அரபிக் குத்து பாடலுக்கு நடனம் ஆடி வீடியோ பகிர்ந்தனர் சில கிரிக்கெட் வீரர்களும் அரபிக் குத்துப் பாடலுக்கு நடனமாடிய வீடியோக்களும் வைரலாகின.

அரபி குத்து பாடலை சிவகார்த்திகேயன் எழுதிய அனிருத் மற்றும் யோனிதா காந்தி இருவர் இணைந்து பாடியிருந்தனர். 

ஜானி மாஸ்டர் நடன இயக்குனராக பணியாற்றி இருந்தார் இந்த நிலையில் இப்பாடல் யூடியூபில் 700 மில்லியன் பார்வைகளை கடந்து அசத்தியுள்ளது. 

இதற்கு முன்பாக நடிகர் தனுஷின் ரவுடி பேபி பாடலே இதுவரை youtubeல் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய நாயகியுடன் இணைந்து கொண்டாட்டம்!


தமிழ் சினிமாவில்‌ பிரபல நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் தனுஷ். தற்போது தனுஷ் நடிப்பில் குபேரா திரைப்படம் வரும் ஜூன் 20 - ம் தேதி வெளிவர உள்ளது.

இதற்கிடையே பாலிவுட்டிலும் தேரே இஷ்க் மெயின் என்ற ஒரு படத்தில் நடித்துவருகிறார் தனுஷ். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சனோன் கமிட்டாகியிருக்கிறார்.

தற்போது இந்த படத்தின் ஷூட்டிங் டெல்லியில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஏற்கனவே தனுஷ் ஹிந்தியில் ராஞ்சனா, ஷமிதாப் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

இதனால் இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. நேற்று நாடு முழுவதும் ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டுள்ளது.

இதில், நட்சத்திரங்கள் பலர் ஹோலி கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகின்றது. இந்நிலையில், ஆனந்த் எல்.ராய், கீர்த்தி சனோன், தனுஷ் ஆகியோர் ஷூட்டிங்கில் ஒன்றாக ஹோலி கொண்டாடி உள்ளனர். அதன் புகைப்படங்கள் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. 



      

கூலி' படத்தின் படப்பிடிப்பை முடித்த பின்னர் 'கைதி 2' படத்தை லோகேஷ்இயக்க உள்ளார்

கூலி' படத்தின் படப்பிடிப்பை முடித்த பின்னர் 'கைதி 2' படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார்.

  தமிழ் சினிமாவில் யூனிவெர்ஸ் என்கிற கான்சப்ட்-ஐ கொண்டு வந்து, அதற்கென தனி மார்க்கெட்டை உருவாக்கியுள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். ஹாலிவுட்டில், மார்வல் - டி.சி படங்களுக்கு எப்படி யூனிவெர்ஸ் இருக்கிறதோ, அதே போல் விக்ரம், லியோ, கைதி படங்களை வைத்து லோகேஷ் சினிமாட்டிக் யூனிவெர்ஸ்-ஐ உருவாக்கியுள்ளார். இந்த யூனிவெர்சில் கடைசியாக லியோ படம் வெளிவந்த நிலையில், அடுத்ததாக கைதி 2 படம் உருவாகவுள்ளது. கார்த்தி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தை ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் தயாரிக்கிறார்கள். கூலி படத்தை முடித்த கையோடு கைதி 2 படத்தின் படப்பிடிப்பை துவங்கவுள்ளார் லோகேஷ்

இந்த நிலையில், கைதி 2 படத்தில் ஏஜென்ட் விக்ரம் ஆகிய கமல் ஹாசன் என்ட்ரி கொடுக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்குறித்து கமல் ஹாசனிடம் லோகேஷ் கனகராஜ் கேட்டுள்ளார். தேதி முடிவு செய்து சொல்லுங்கள், வந்துவிடுகிறேன் என கமல் கூறினாராம். இதன்மூலம், கைதி 2-வில் ஏஜென்ட் விக்ரமாக கமல் என்ட்ரி கொடுக்கப்போவது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  . 

விஜய் இதை கண்டிப்பா மாற்றிக்கொள்ள வேண்டும்..! ரகசியம் உடைத்த நடிகை திரிஷா..!

 தென்னிந்திய சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வரும் திரிஷா, அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்தாலும், ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளில் லீட் ரோலில் நடித்து வருகிறார்.அவர் நடிப்பில் அஜித்தின் “விடாமுயற்சி” வரும் 6 ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள நிலையில், திரிஷா நடிகர் விஜய் குறித்து பேசிய பேட்டி இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

விஜய்யின் அமைதி

திரிஷா விஜய்யை “போரிங்” என்று கூறியதற்கான காரணத்தை விளக்கினார். “என்னை படப்பிடிப்பில் டீஸ் செய்வது சிம்புதான், ஆனால் விஜய், ரொம்ப போரிங், ரொம்ப அமைதியாக இருப்பார். ஒரு பெரிய சுவரை பார்த்து சும்மாவே உட்கார்ந்திருப்பார். எந்த பிரச்சனையாக இருந்தாலும் சைலெண்ட்டாகத்தான் இருப்பார்,” என்று திரிஷா கூறினார்.

விஜய்யின் இந்த அமைதியான குணம் சில சமயங்களில் அவரைப் போன்று இருப்பதாகத் தோன்றலாம். ஆனால், உண்மையில் அவர் தனது வேலையில் மிகவும் கவனம் செலுத்துகிறார். படப்பிடிப்பில் கூட, அவர் தனது கதாபாத்திரத்தைப் பற்றியும், படத்தின் வெற்றியைப் பற்றியும் சிந்தித்துக் கொண்டிருப்பார்.விஜய்யின் பதில்

விஜய் திரிஷாவின் கருத்துக்கு பதிலளித்தார். “வேலைங்க, அதைப்பத்தி யோசிப்பேன்,” என்று விஜய் கூறினார்.

விஜய் எப்போதும் தனது வேலையில் தீவிரமாக இருப்பார். அவர் தனது கதாபாத்திரத்திற்காக கடினமாக உழைப்பார். அமைதியாக இருந்தாலும், அவர் எப்போதும் தனது வேலையைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பார்.விஜய்யின் பதில்

விஜய் திரிஷாவின் கருத்துக்கு பதிலளித்தார். “வேலைங்க, அதைப்பத்தி யோசிப்பேன்,” என்று விஜய் கூறினார்.

திரிஷாவின் கருத்து

திரிஷா விஜய்யின் அமைதியான குணத்தைப் பற்றி மேலும் கூறினார். “அதெல்லாம் இல்லை, சில சமயம் கண்ணை மூடிக்கிட்டு இருப்பார்,” என்று திரிஷா கூறினார்.

விஜய் சில சமயங்களில் ஓய்வெடுப்பதற்காக கண்களை மூடிக்கொண்டு இருக்கலாம். ஆனால், அவர் எப்போதும் தனது வேலையில் கவனம் செலுத்துகிறார்.

திரிஷா, விஜய் தனது மனநிலையை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் கூறினார். ஆனால், விஜய் “நான் அப்படியெல்லாம் கிடையாது,” என்று பதிலளித்தார்..

திரிஷாவின் கருத்து ஏன் முக்கியமானது?

திரிஷாவின் கருத்துக்கள் விஜய்யின் ஆளுமையைப் பற்றிய ஒரு புதிய கண்ணோட்டத்தை வழங்குகின்றன. விஜய் அமைதியானவராக இருந்தாலும், அவர் தனது வேலையில் மிகவும் அர்ப்பணிப்புடன் இருக்கிறார் என்பதை திரிஷாவின் கருத்துக்கள் மூலம் நாம் புரிந்து கொள்ள முடியும்.

திரிஷாவின் கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. ரசிகர்கள் பலரும் திரிஷாவின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

திரிஷா விஜய்யை “போரிங்” என்று கூறியது ஒரு நகைச்சுவையான கருத்து. ஆனால், விஜய்யின் அமைதியான குணம் மற்றும் அவரது அர்ப்பணிப்பு ஆகியவை அவரது வெற்றிக்கு முக்கிய காரணங்களாக இருக்கலாம்.

இயக்குனர் சங்கரின் Game changer திரைப்படத்திற்கு என்ன ஆனது?

 ப்ரோமோஷனுக்காகவே தயாரிப்பாளர் பணத்தை தண்ணியாக செலவு செய்தார். ஷங்கர் கூட பல பேட்டிகள் கொடுத்து படத்தை பிரமோட் செய்தார்.

ஆனாலும் படம் வெளியான பிறகு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. இதனால் தயாரிப்பாளருக்கு பெரும் தொகை நஷ்டமானது.

420 கோடி வரை செலவு செய்யப்பட்டிருந்த இப்படம் 200 கோடியை கூட தொடவில்லை. படத்திற்கான விமர்சனங்களும் கலவையாக அமைந்தது.

ஓடிடியில் வெளியாகும் ஷங்கரின் கேம் சேஞ்சர்

அது மட்டும் இன்றி சங்கர் பல வருடங்களுக்கு பின் தங்கி இருக்கிறார். இன்னும் அப்டேட் ஆகவில்லை என்ற கருத்துக்களும் எழுந்தது. இப்படி தியேட்டரில் மொக்கை வாங்கிய கேம் சேஞ்சர் டிஜிட்டலுக்கு வருகிறது.

தல அஜித் படத்திற்கு நெருக்கடி !

 விடாமுயற்சி படத்தைத் தொடர்ந்து அஜித்தின் குட் பேட் அக்லி படமும் ரிலீஸ் ஆகவுள்ளது. அடுத்தடுத்து இரண்டு படங்கள் ரிலீஸ் ஆவதால் யார் கண் பட்டது என்று தெரியவில்லை. இப்பொழுது அஜித் படத்திற்கு நெருக்கடி வந்துவிட்டது. இந்த படம் ரிலீசில் சிக்கல் உருவாகியுள்ளது.

ஏப்ரல் 10, இந்த திகதியை இரண்டு படங்கள் கூறி வைத்திருந்தது. அதாவது ஏப்ரல் 14ஆம் திகதி தமிழ் வருடப்பிறப்பு என்பதால் அந்த விடுமுறை நாட்களுக்கு தகுந்தார் போல் அஜித்தின் குட் பேட் அக்லி மற்றும் தனுஷின் இட்லி கடை இரண்டு படங்களும் வெளிவருவதாக இருந்தது.

இரண்டு படங்கள் வருவதால் விநியோகத்தர் மற்றும் தியேட்டர் உரிமையாளர்கள் என அனைவரும் நெருக்கடியில் இருந்தனர். ஒரே நேரத்தில் வெளிவருவதால் தியேட்டர்கள் ஒதுக்குவதில் பிரச்சனை காரணமாக இந்த விஷயத்தை நினைத்து கவலைப்பட்டுக் கொண்டிருந்தனர்.

இப்பொழுது அஜித்தின் குட் பேட் அக்லி இந்த ரேஸில் இருந்து பின்வாங்குவது போல் தெரிகிறது. இதுவரை இந்த படத்தின் சாட்டிலைட் இன்னும் வியாபாரமாகவில்லை. ஏற்கனவே இந்த படத்தின் OTT உரிமையை நெட்பிளிக்ஸ் 95 கோடிகள் கொடுத்து வாங்கியுள்ளது. சாட்டிலைட் வியாபாரத்திற்கு சன் டிவியிடம் பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கிறது.

ஒருவேளை சன் டிவி இந்த படத்தின் சாட்டிலைட் உரிமைகளை கேட்கிற தொகைக்கு வாங்கிவிட்டால் இது ஏப்ரல் மாதமே ரிலீஸ் ஆகும். அப்படி இல்லை என்றால் அஜித்தின் பிறந்தநாள் மே 1ஆம் தேதி வருகிறது. அன்று இதை ரிலீஸ் செய்வதற்கு திட்டமிடுகிறார்கள். இப்பொழுது தனுஷின் இட்லி கடைக்கே ரூட் கிளியராக இருக்கிறது.