கூலி' படத்தின் படப்பிடிப்பை முடித்த பின்னர் 'கைதி 2' படத்தை லோகேஷ்இயக்க உள்ளார்

கூலி' படத்தின் படப்பிடிப்பை முடித்த பின்னர் 'கைதி 2' படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார்.

  தமிழ் சினிமாவில் யூனிவெர்ஸ் என்கிற கான்சப்ட்-ஐ கொண்டு வந்து, அதற்கென தனி மார்க்கெட்டை உருவாக்கியுள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். ஹாலிவுட்டில், மார்வல் - டி.சி படங்களுக்கு எப்படி யூனிவெர்ஸ் இருக்கிறதோ, அதே போல் விக்ரம், லியோ, கைதி படங்களை வைத்து லோகேஷ் சினிமாட்டிக் யூனிவெர்ஸ்-ஐ உருவாக்கியுள்ளார். இந்த யூனிவெர்சில் கடைசியாக லியோ படம் வெளிவந்த நிலையில், அடுத்ததாக கைதி 2 படம் உருவாகவுள்ளது. கார்த்தி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தை ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் தயாரிக்கிறார்கள். கூலி படத்தை முடித்த கையோடு கைதி 2 படத்தின் படப்பிடிப்பை துவங்கவுள்ளார் லோகேஷ்

இந்த நிலையில், கைதி 2 படத்தில் ஏஜென்ட் விக்ரம் ஆகிய கமல் ஹாசன் என்ட்ரி கொடுக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்குறித்து கமல் ஹாசனிடம் லோகேஷ் கனகராஜ் கேட்டுள்ளார். தேதி முடிவு செய்து சொல்லுங்கள், வந்துவிடுகிறேன் என கமல் கூறினாராம். இதன்மூலம், கைதி 2-வில் ஏஜென்ட் விக்ரமாக கமல் என்ட்ரி கொடுக்கப்போவது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  . 

அஜித் குமார் நடிப்பில் வெளியான விடாமுயற்சி திரைப்படத்தின் ட்விட்டர் விமர்சனங்கள் குறித்து பார்க்கலாம்.

 தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் விடா முயற்சி என்ற திரைப்படம் பிப்ரவரி ஆறாம் தேதியான இன்று திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகி உள்ளது. ரசிகர்கள் திரையரங்கையே தெறிக்கவிட்டு கொண்டாடி வருகின்றனர்.

மகிழ்திருமேனி இயக்கத்திலும், லைகா ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும், உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் திரிஷா, அர்ஜுன் , ரெஜினா போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஏற்கனவே ப்ரீ புக்கிங்கில் 25 கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்த நிலையில் தற்போது இந்த திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்தத் திரைப்படத்தின் சில ட்விட்டர் விமர்சனங்கள் இதோ..



தனது முன்னாள் காதலி திரிசாவையும் சிம்புவையும் பற்றி பேசிய ராணா

 தெலுங்கு நடிகர் ராணாவும், த்ரிஷாவும் காதலித்ததாக முன்பு பல ஆண்டுகளாக பேசப்பட்டது. சென்னையில் த்ரிஷா வீட்டு முகவரி மட்டும் தான் தெரியும் என ராணா கூட நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்தார். இருவரும் சின்சியராக காதலிக்கிறார்கள், திருமணம் செய்து கொள்வார்கள் என பேச்சாக கிடந்தது. 

ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.த்ரிஷாவோ இன்னும் சிங்கிளாக இருக்கிறார். ராணாவோ மிஹீகா பஜாஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். த்ரிஷாவும் விரைவில் திருமணம் செய்து கொண்டு செட்டிலாக வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.த்ரிஷாவுக்கு விவாகரத்தில் நம்பிக்கை இல்லை. 

அதனால் அவசரப்பட்டு யாரையாவது திருமணம் செய்து கொண்டு அந்த வாழ்க்கை பிடிக்கவில்லை என விவாகரத்து கோரி குடும்பநல நீதிமன்ற வாசலை மிதிக்க அவர் தயாராக இல்லை. அதனால் தன்னை மாறச் சொல்லாமல் அப்படியே ஏற்றுக்கொள்ளும் நபருக்காக காத்திருக்கிறார் த்ரிஷா.

இந்நிலையில் த்ரிஷாவை காதலித்ததை ராணா ஒரு முறை ஒப்புக் கொண்டது பற்றி தற்போது பேசப்படுகிறது. பிரபல பாலிவுட் இயக்குநரும், தயாரிப்பாளருமான கரண் ஜோஹர் தொகுத்து வழங்கி வரும் காஃபி வித் கரண் நிகழ்ச்சியில் முன்பு கலந்து கொண்ட ராணா த்ரிஷா பற்றி கூறியதாவது, 10 ஆண்டுகளுக்கும் மேலாக த்ரிஷா என் தோழியாக இருந்து வருகிறார். நாங்கள் பல காலமாக நண்பர்கள், டேட் கூட செய்தோம். ஆனால் டேட்டிங் ஒர்க்அவுட் ஆகவில்லை என்றார்.

த்ரிஷாவை காதலித்ததாக பேசப்பட்டபோதும் சரி, பிரேக்கப் ஆன போதும் சரி அது பற்றி பேசாத ராணா, கரண் ஜோஹர் நிகழ்ச்சியில் பேசியது பலரின் கவனத்தையும் ஈர்த்தது. எப்பொழுதுமே தன் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி பேச விரும்பாத த்ரிஷாவோ ராணா விவகாரம் பற்றி பேசியதே இல்லை.

இந்நிலையில் சிம்புவும் சிங்கிளாக இருக்கிறார், த்ரிஷாவும் சிங்கிளாக இருக்கிறார். இருவருக்குமே விவாகரத்து மீது நம்பிக்கை இல்லை. அதனால் சிம்புவும், த்ரிஷாவும் திருமணம் செய்து கொண்டால் நன்றாக இருக்குமே என ரசிகர்கள் ஆசைப்படுகிறார்கள்.



விஜயின் ஜனநாயகன் முதல் பாடல் ?

 எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் ‛ஜனநாயகன்'. அவருடன் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, பிரியாமணி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கும் இந்த படம் இந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் திரைக்கு வருகிறது. அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியான நிலையில், வருகிற பெப்ரவரி 14ம் திகதி காதலர் தினத்தன்று ‛ஜனநாயகன்' படத்தின் முதல் பாடல் வெளியாக இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே விஜய் நடித்த கத்தி, மாஸ்டர், பீஸ்ட், லியோ போன்ற படங்களில் சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்த அனிருத் இந்த படத்திற்கும் இசையமைத்திருப்பதால் இந்த முதல் பாடல் விஜய் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.