கூலி பாக்ஸ் ஆபிஸ் இத்தனை கோடியா;வசூல் வேட்டையில் பட்டை கிளப்பும் ரஜினிகாந்த்

 

 கூலி திரைப்படம் பெரிதும் எதிர்பார்ப்புடன் வருகிற ஆகஸ்ட் 14ம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இப்படத்தை முன்னணி இயக்குநரான லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். ரஜினியுடன் லோகேஷ் கைகோர்ப்பது இதுவே முதல் முறையாகும்.மேலும் இப்படத்தில் அமீர் கான், நாகர்ஜுனா, சௌபின் சாஹிர், உபேந்திரா, ஸ்ருதி ஹாசன், சத்யராஜ் என பலரும் நடித்துள்ளனர். முன்னணி நடிகை பூஜா  இப்படத்தில் மோனிகா எனும் பாடலுக்கு  நடனம் ஆடியுள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார்.கூலி திரைப்படத்தின் முன் பதிவு கடந்த சில நாட்களுக்கு முன்பே வெளிநாடுகளில் துவங்கிவிட்டன. இந்த ப்ரீ புக்கிங்கில் இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. ரிலீஸுக்கு இன்னும் 9 நாட்கள் இருக்கும் நிலையில், இதுவரை நடந்த முன் பதிவில் இப்படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.அதன்படி, இதுவரை நடைபெற்ற வெளிநாட்டு முன் பதிவில் ரூ. 15 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது கூலி திரைப்படம். கண்டிப்பாக ரிலீஸுக்கு முன் ப்ரீ புக்கிங்கில் மாபெரும் வசூல் சாதனையை கூலி படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கூலி படப்பிடிப்பிற்காக சென்னை வந்த நடிகை ஸ்ருதிஹாசன்

 ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் புதிய படம் "கூலி." 

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தில் ஏற்கனவே சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், சுருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. அனிருத் இசையமைக்கும் இந்த படத்திற்கு கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார்.அன்பறிவ் சண்டைக் காட்சிகளை இயக்குகின்றனர்.


 ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு சிகிடு வைப் என்ற பாடலின் முன்னோட்டத்தை படக்குழு வெளியிட்டது. இந்நிலையில் ஸ்ருதிஹாசன் கூலி படப்பிடிப்பிற்காக இன்று சென்னை வந்தார். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

கூலி' படத்தின் படப்பிடிப்பை முடித்த பின்னர் 'கைதி 2' படத்தை லோகேஷ்இயக்க உள்ளார்

கூலி' படத்தின் படப்பிடிப்பை முடித்த பின்னர் 'கைதி 2' படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார்.

  தமிழ் சினிமாவில் யூனிவெர்ஸ் என்கிற கான்சப்ட்-ஐ கொண்டு வந்து, அதற்கென தனி மார்க்கெட்டை உருவாக்கியுள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். ஹாலிவுட்டில், மார்வல் - டி.சி படங்களுக்கு எப்படி யூனிவெர்ஸ் இருக்கிறதோ, அதே போல் விக்ரம், லியோ, கைதி படங்களை வைத்து லோகேஷ் சினிமாட்டிக் யூனிவெர்ஸ்-ஐ உருவாக்கியுள்ளார். இந்த யூனிவெர்சில் கடைசியாக லியோ படம் வெளிவந்த நிலையில், அடுத்ததாக கைதி 2 படம் உருவாகவுள்ளது. கார்த்தி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தை ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் தயாரிக்கிறார்கள். கூலி படத்தை முடித்த கையோடு கைதி 2 படத்தின் படப்பிடிப்பை துவங்கவுள்ளார் லோகேஷ்

இந்த நிலையில், கைதி 2 படத்தில் ஏஜென்ட் விக்ரம் ஆகிய கமல் ஹாசன் என்ட்ரி கொடுக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்குறித்து கமல் ஹாசனிடம் லோகேஷ் கனகராஜ் கேட்டுள்ளார். தேதி முடிவு செய்து சொல்லுங்கள், வந்துவிடுகிறேன் என கமல் கூறினாராம். இதன்மூலம், கைதி 2-வில் ஏஜென்ட் விக்ரமாக கமல் என்ட்ரி கொடுக்கப்போவது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  .