அப்பா வயது நடிகருடன் அப்படி நடிக்க வெச்சாங்க!

அப்பா வயது நடிகருடன் அப்படி நடிக்க வெச்சாங்க!

நடிகை மிருனாள் தாகூர் தென்னிந்திய சினிமா மட்டுமின்றி ஹிந்தியிலும் முக்கிய நடிகையாக வலம் வருகிறார். அவர் நடிகர் தனுஷை காதலிப்பதாக சமீப காலமாக பல கிசுகிசுக்கள் வந்து கொண்டிருந்தது.

ஆனால் அதெல்லாம் வதந்தி என மிருனாள் கூறிவிட்டார். மேலும் அந்த வதந்தியால் தனக்கு அதிகம் ப்ரோமோஷன் இலவசமாக கிடைத்திருக்கிறது என்றும் விமர்சித்தார்.

சமீபத்திய பேட்டி ஒன்றில் மிருனாள் தாகூர் தான் கடந்த வருடம் நடித்த Son of Sardaar 2 பற்றி கோபமாக பேசி இருக்கிறார்.

அந்த படத்தில் தனக்கு ஜோடியாக ஒரு வயதான நடிகரை தேர்வு செய்வார்கள் என கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை என கூறியுள்ளார்.

வயதான நடிகர் சங்கி பாண்டே தான் மிருனாள் தாகூரின் கணவர் ரோலில் அந்த படத்தில் நடித்திருந்தார். சங்கி பாண்டேவின் மகள் அனன்யா பாண்டே தற்போது ஹிந்தி சினிமாவில் முக்கிய நடிகையாக இருக்கிறார். அவருக்கு மிருனாளை விட வெறும் 6 வயது தான் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு மிக மிக சீனியர் ஆன நடிகர் என் கணவர் ரோலில் நடிப்பார் என எனக்கு தெரியாது. ஒரு படத்தில் நான் அதை எதிர்பார்க்கவில்லை. அங்கேயே நான் தோன்றுவிட்டேன். அங்கேயே எல்லா நம்பிக்கையும் உடைந்துவிட்டது” என படக்குழு மீது காட்டமாக தாக்கி பேசியுள்ளார் மிருனாள்.

About the Author

You may like these posts

0 Comments

Your email address will not be published. Required fields are marked *

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.