காவேரிக்கு பழைய நினைவுகள் வருமா, அவர் விஜய் உடன் சேர்ந்து வாழ்வாரா என மகாநதி சீரியல் ரசிகர்கள் எல்லோரும் எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள்.
ஆனால் காவேரி விஜய்க்கு பெண் பார்த்து திருமணம் செய்ய முயற்சித்து வருகிறார். விஜய் கார்த்திக்கிடம் காவேரி பற்றி தப்பு தப்பாக சொன்ன விஷயம் தற்போது அவர் மூலமாகவே காவேரிக்கு தெரிந்துவிட்டது.
அவரது அம்மாவும் காவேரி பற்றி மோசமாக பேசியதை எல்லாம் அவர் சொல்லிவிடுகிறார்.
அதனால் காவேரி கடும் கோபமாக அம்மாவிடம் பேசுகிறார். ‘உண்மையில் நீ எனக்கு அம்மாவா என எனக்கு சந்தேகமா இருக்கு. இந்த வீட்ல இருக்காத, எங்கயாவது போய்டு’ என திட்டுகிறார்.
அதனால் அம்மா வீட்டை விட்டு சென்றுவிட அதன் பின் மாலையில் காவேரி வருத்தத்துடன் விஜய்க்கு போன் செய்து அம்மாவை காணவில்லை என சொல்கிறார். அவர் எங்கே? ப்ரோமோவை பாருங்க.
