நடிகை சமந்தாவின் 39-வது பிறந்தநாள்.. அவருடைய சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

நடிகை சமந்தாவின் 39-வது பிறந்தநாள்.. அவருடைய சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

தென்னிந்திய சினிமாவில் தனது திரை வாழ்க்கையில் தொடங்கி, இன்று இந்திய அளவில் டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார் சமந்தா. 15 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் பயணித்து வரும் இவர், பல பிரச்சனைகள், சர்ச்சைகள், கஷ்டங்கள் என பார்க்காத விஷயமே இல்லை.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மயோசிடிஸ் என்கிற நோயால் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்தார். கடந்த ஆண்டு இயக்குநர் ராஜ் நிடிமொருவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

திருமணத்திற்கு பின் சமந்தாவின் நடிப்பில் வெளிவரவிருக்கும் திரைப்படம் மா இண்டி பங்காரம். இப்படத்தில் ஆக்ஷன் ஹீரோயினாக கலக்கியுள்ளார். சமீபகாலமாக ரொமான்டிக் ஹீரோயினாக நடிப்பதை விட, ஆக்ஷன் ஹீரோயினாக நடிப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார் சமந்தா என்பது குறிப்பிடத்தக்கது.

ரசிகர்களின் மனதில் தனி இடத்தை பிடித்துள்ள நடிகை சமந்தாவின் பிறந்தநாள் இன்று. தனது 39-வது பிறந்தநாளை கொண்டாடும் சமந்தாவிற்கு ரசிகர்கள், திரையுலகினர் என பலரும் தங்களது வாழ்த்துகளை சமூக வலைத்தளத்தில் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இந்திய சினிமாவில் டாப் நட்சத்திரங்களில் ஒருவராக இருக்கும் சமந்தாவின் மொத்த சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, நடிகை சமந்தாவின் சொத்து மதிப்பு ரூ. 110 கோடிக்கும் மேல் இருக்கும் என கூறப்படுகிறது.

மேலும், இவர் ஒரு திரைப்படத்தில் நடிக்க ரூ. 5 முதல் ரூ. 8 கோடி வரை சம்பளம் வாங்குவதாகவும், வெப் தொடரில் நடிக்க ரூ. 10 கோடி வரை சம்பளம் வாங்குவதாகவும் கூறப்படுகிறது.

 

 

 

About the Author

You may like these posts

0 Comments

Your email address will not be published. Required fields are marked *

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.