மறுபடியும் சங்கீதா விவாகரத்து பற்றி பேசிய விஜய் – என்ன சொல்லிருக்காரு தெரியுமா?

மறுபடியும் சங்கீதா விவாகரத்து பற்றி பேசிய விஜய் – என்ன சொல்லிருக்காரு தெரியுமா?

திருநெல்வேலியில் செய்த பரப்புரையில் தனது மனைவி சங்கீதா விவாகரத்து பற்றி நடிகர் விஜய் பேசி இருக்கிறார் இது இணையத்தில் மறுபடியும் பேசு பொருளாக மாறி உள்ளது.

விஜய்யிடம் இருந்து விவாகரத்து கோரி அவரது மனைவி சங்கீதா செங்கல்பட்டு குடும்பநல கோர்டில் மனுதாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் சங்கீதா பல விடயங்களை குறிப்பிட்டிருந்தார்.

அதில், நடிகர் விஜய்க்கு நடிகை ஒருவருடன் தொடர்பு இருப்பதாக கூறி இருந்தார். இது இணையத்தில் காட்டு தீபோல பரவியது.


தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கும் சமயத்தில் இந்த விவாகரத்து மனு பெருதும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இதன் பின்னர் மகளீர் அணி கூட்டத்தில் விஜய் வொர்த் இல்லை என்று கூறியது இன்னும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் விஜய் தற்போது மறுபடியம் விவாகரத்து பற்றி பேசி உள்ளார்.

தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் இன்று திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் நடைபெறும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் மற்றும் ரோடு ஷோ நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக தூத்துக்குடி விமான நிலையம் வந்திருந்தார்.

இங்கே விஜய் மக்கள் மத்தியில் பேச தொடங்கினார். விஜய் தொடந்து பல விடயங்களை பேசினார். அரசியல் விடயங்களை பற்றி பேசிய அவர்

அத்தோடு மனைவியின் விவாகரத்து பற்றியும் விஜய் பேசினார். விஜய் பேசும் போது “கரூர் விஷயத்தில் என்ன நடந்தது என்பதே அனைவருக்கும் தெரியும்.

ஆனால் பழி மட்டும் என் மீது போட்டார்கள். அது மக்களிடம் எடுபடவில்லை.’ஜன நாயகன்’ திரைப்படத்தை முடக்கினால் என்னை முடக்கிவிடலாம் எனக் கனவு கண்டார்கள்.

அது நடக்கவில்லை. விஜய்க்கும் மட்டும் தனியாக SOP கட்டுப்பாடு. நான் மக்களைச் சந்திக்க கூடாது என இந்த கட்டுப்பாடு போட்டார்கள். அதுவும் மக்களிடம் எடுபடவில்லை.

அடுத்து இத்தனை வருஷம் வெயிட் பண்ணி, தேர்தலுக்கு 30 நாளுக்கு முன்னாடி, என்னை சுற்றி இருப்பவர்களை வைத்தே ஒரு அவதூறு பரப்புனாங்க.

அது என்னவென்று உங்களுக்கே தெரியும். அதுவும் மக்கள்கிட்ட எடுபடவில்லை” என்று பேசி இருந்தார். மனைவியின் விவாகரத்து பற்றி பரப்புரையில் விஜய் மறைமுகமாக பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. 

About the Author

You may like these posts

0 Comments

Your email address will not be published. Required fields are marked *