முக்கியமான ஆதாரத்தை கைப்பற்றிய முத்து, சிக்கப்போவது ரோஹினியா, சிந்தாமணியா?…

முக்கியமான ஆதாரத்தை கைப்பற்றிய முத்து, சிக்கப்போவது ரோஹினியா, சிந்தாமணியா?…

வாரா வாரம் சீரியலில் ஏதாவது பிரச்சனை இருந்தால் தானே அது சீரியல் என்றாகிவிட்டது. அப்படி தான் சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்தடுத்து பிரச்சனைகளாக வருகிறது.

கடந்த வாரம் எல்லாம் மீனா-சிந்தாமணி போட்டி போடும் பூ சங்க தேர்தல் நடந்தது, அதில் சிந்தாமணி கொடுத்த பல தடைகளை தாண்டி மீனா வெற்றிப்பெற்றுவிட்டார். ஆனால் தன்னை தோற்கடித்த மீனாவை எப்படியாவது அந்த பதவியில் இருந்து விலக வைப்பேன் என பிளான் போட்டு வருகிறார்கள் சிந்தாமணி.

இதற்கு இடையில் சிந்தாமணிக்கு தனது மகள் மீனாவின் தம்பியை காதலிக்கிறார் என தெரிந்துவிட்டது, மீனா-முத்துவிற்கும் ரேகா அம்மா யார் என்பது தெரிந்துவிட்டது.

மனோஜ் தான் நிச்சயதார்த்தம் செய்த பெண்ணுடன் ஸ்ருதி ரெஸ்டாரன்டுக்கு சாப்பிட செல்கிறார். அங்கு வழக்கம் போல் தனது தம்பிகள், தம்பியின் ரெஸ்டாரன்ட் என எதுவும் இல்லாமல் மோசமாக பேசுகிறார்.

ஆனால் மனோஜ் தனது தம்பியையும், தம்பி மனைவியின் ரெஸ்டாரன்ட் என எல்லாவற்றையும் தரக்குறைவாக பேசுவது அந்த பெண்ணுக்கு பிடிக்கவே இல்லை. அடுத்து மீனா-முத்து இருவரும் சத்யா காதல் குறித்து பேசுகிறார்கள்.

சிந்தாமணி தனது கணவரை சந்தித்து ரேகா காதல் குறித்து கூற அவரோ சத்யா இப்படி செய்வான் என எதிர்ப்பார்க்கவில்லை, நான் ரேகாவை புதியதாக திறக்கும் கம்பெனியை பார்த்துக்கொள்ள அனுப்பிவிடுகிறேன் என கூறுகிறார்.

இன்றைய எபிசோட் முடிவடைய, முத்து தனது மனைவி மீனாவை கத்தியால் குத்தியவரை கண்டுபிடிக்கிறார். அவரை அடித்து மிரட்டியதில் சிந்தாமணி சொல்லி தான் இப்படி செய்தேன் என ஒப்புக்கொள்கிறார். இது அடுத்த வார எபிசோடின் புரொமோவாக வெளியாகியுள்ளது.

 

 

About the Author

You may like these posts

0 Comments

Your email address will not be published. Required fields are marked *

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.