
திருமணத்துக்கு பின்னர் முதல் முறையாக தனது பிறந்த வீட்டுக்கு காதல் கணவருடன் ஜோடியாக சென்ற ராஷ்மிகாவுக்கு அவரது பெற்றோர் பாராம்பரிய முறைப்படி அதிரடி வரவேற்ப்பு கொடுத்ததுடன் வீட்டை பரிசாக வழங்கிய விடயம் தற்போது இணையத்தில் கவனம் பெற்று வருகின்றது.
ராஷ்மிகா – விஜய் தேவரகொண்டா நடிகை ராஷ்மிகா மந்தனாவும், நடிகர் விஜய் தேவரகொண்டாவும் கீதா கோவிந்தம் உள்ளிட்ட படங்களில் நடித்தபோது காதலிக்க ஆரம்பித்தார்கள்.

விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா திருமணம் கடந்த 26 ஆம் திகதி உதய்பூரில் உள்ள பிரம்மாண்ட மாளிகையில் நடைப்பெற்றது.
இவர்களின் திருமணம் ஒரு வார காலத்திற்கும் மேல் பல கொண்டாட்டங்களுக்கு நிகழ்வுகளுடன் நடைபெற்றது.
அனைத்து புகைப்படங்களையும் இந்த தம்பதியினரே இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை குஷியாக்கினர்.
இந்நிலையில், திருமணத்துக்கு பிறகு முதல்முறையாக தனது காதல் கணவர் விஜய் தேவரகொண்டாவுடன் ராஷ்மிகா தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுள்ளார்.

அவர்களுக்கு கொடவா இன பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ராஷ்மிகாவுக்கு அவரது தந்தை மதன் மந்தனா, தாய்சுமந்த் மந்தனா ஆகியோர் தங்களின் பெயரில் இருந்த வீட்டை திருமண பரிசாக வழங்கியுள்ளனர்.
விராஜ்பேட்டை சார்-பதிவாளர் அலுவலகத்தில் அவரது பெற்றோர் ராஷ்மிகாவின் பெயருக்கு வீட்டை மாற்றி எழுதி கொடுத்ததுள்ளனர். ராஷ்மிகாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியும், பிறந்தநாள் விழாவும் (ஏப்ரல் 5) ஒரே நாளில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
