21 ஆண்டுகளுக்கு பின் கமலுடன் இணைந்த அபிராமி! இந்த வயதிலேயே தக்லைப்பில் கவர்ச்சி காட்டிய அபிராமி! வெளியான புகைப்படங்கள்


கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான விருமாண்டி படத்தில் கமலின் அன்னலட்சுமியாக நடித்து பாராட்டுக்களை அள்ளிய அபிராமி, 21 ஆண்டுகளுக்கு பிறகு தக் லைஃப்பில் மீண்டும் கமலின் ஜோடியாக நடித்து கவனம் ஈர்த்து வருகிறார்.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்துள்ள 'தக் லைஃப்' திரையரங்குகளில் ரிலீசாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

'தக் லைஃப்' படத்தின் வாயிலாக 21 ஆண்டுகளுக்கு பிறகு கமலுக்கு ஜோடியாக இப்படத்தில் அபிராமி நடித்தது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பினை பெற்றது.

கடந்த 2004 ஆம் ஆண்டு கமல் ஹாசனே இயக்கி நடித்து வெளியான விருமாண்டி படத்தில் அன்னலட்சுமி கதாபாத்திரத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இந்நிலையில் 21 ஆண்டுகளுக்கு பிறகு தக் லைஃப்பில் மீண்டும் கமலின் மனைவியாக நடித்து அசத்தியுள்ளார் அபிராமி.

ரிலீசாகியுள்ள 'தக் லைஃப்' படத்தை பார்த்த ரசிகர்கள் கமல், அபிராமி காம்போவை திரையில் பார்க்க செம்ம அழகாக இருப்பதாக கூறி வருகின்றனர்.

மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என தனது நீண்ட நாள் ஆசை 'தக் லைஃப்' மூலமாக நிறைவேறியதாக புரமோஷனில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் திரையரங்குகளில் ரிலீசாகியுள்ள 'தக் லைஃப்' படத்தில் கமல், சிம்பு, திரிஷாவுடன் அபிராமியின் நடிப்பையும் கொண்டாடி வருகின்றனர் ரசிகர்கள்.