தெலுங்கு சினிமாவில் பிரபல காமெடியனாக இருந்த நடிகர் பிஷ் வெங்கட் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது மரணம் அடைந்திருக்கிறார்.
அவர் தமிழில் சிறுத்தை சிவா இயக்கிய சிறுத்தை படத்தில் நடித்து இருந்தவர். வில்லன் பாவுஜி-யின் அடியாள் ரோலில் அவர் நடித்து இருப்பார்.
மரணம்
53 வயதாகும் நடிகர் பிஷ் வெங்கட் கிட்னி மற்றும் கல்லீரல் செயலிழப்பு காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்தார்.
உடல்நிலை மோசமான நிலையில் வெண்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இன்று மரணம் அடைந்தார். அவருக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.