300 கோடி ரூபாவை நெருங்கிய கருப்பு?


நடிகர் சூர்யாவின் கருப்பு திரைப்படத்தின் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் சூர்யாவே ஆச்சரியப்படும் அளவிற்கு கருப்பு திரைப்படம் வசூலில் சக்கைபோடு போட்டு வருகிறது. தமிழகத்தில் மட்டுமல்லாது பல பகுதிகளிலும் கருப்புக்கு இன்று வரை டிக்கெட் விற்பனைகள் சிறப்பாகவே நடைபெற்று வருவதால் திரையரங்க உரிமையாளர்கள் வரை மகிழ்ச்சியுடன் உள்ளனர். விரைவிலேயே, ஹிந்தியிலும் மொழி மாற்றம் செய்து வெளியாகவுள்ளது.

இந்த நிலையில், இதுவரை இப்படம் உலகளவில் ரூ. 280 கோடிக்கும் அதிகமாக வசூலித்திருக்கலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில், தமிழகத்திலேயே கருப்பு ரூ. 150 கோடியை ஈட்டியிருக்கலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

நடிகர் சூர்யாவின் திரைப்படங்களிலேயே இதுவே அதிக வசூலைச் செய்திருப்பதால் அவரின் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். 

Post a Comment