42 வயதில் இப்படியொரு பிட்னஸா? ரகசியம் பகிரும் அபிராமி

நடிகை அபிராமி, தமிழில் 'மிடில் கிளாஸ் மாதவன், சமுத்திரம், விருமாண்டி, மகாராஜா, தக் லைப்' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். ரசிகர்களிடமும் பரிச்சயமான அபிராமி, இதுவரை தான் நடித்த படங்களை விட, தற்போது அவர் நடித்திருக்கும் 'பிளாஸ்ட்' படத்தில் ஒல்லியான தோற்றத்தில் இருப்பது பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. 

42 வயதில் இவ்வளவு பிட்னஸாக வைத்துள்ளது கவனத்தை ஈர்த்தது. அர்ஜூன் ஜோடியாக நடித்துள்ள அபிராமியின் பிட்னஸ் குறித்து நேர்காணல் பலவற்றில் கேள்விகள் கேட்கப்படுகின்றன.

இதற்கு அபிராமி கூறுகையில், ''இளம் வயதில் நாம் நம் உடலை கவனித்துக் கொண்டால், வயதான பின்னர் நம் உடலே நம்மை கவனித்துக் கொள்ளும். பணம், பொருள் என எதை வேண்டுமானாலும் ஒருவர் வைத்திருக்கலாம். ஆனால் அதை வைத்து ஆரோக்கியத்தை வாங்க முடியாது. 40 வயதை கடக்கும்போது, பெண்களுக்கு உடலில் கால்சியம் இழப்பு ஏற்படும். அப்போது தசை வலிமையின் தேவை அதிகமாகும். இந்த வயதில்தான் மெனோபாஸ்க்கு முந்தைய மற்றும் பிந்தைய காலகட்டமும் வரும். இதனால் உடலில் பல்வேறு ஹார்மோன் மாற்றங்களும் ஏற்படக்கூடும். இதையெல்லாம் ஆரோக்கியமாக எதிர்கொள்ள, 35 வயதை கடந்த பின்னரே பெண்கள் அனைவரும் தங்கள் நலனில் மிக அதிக கவனம் செலுத்த வேண்டும்'' என அறிவுரை வழங்கினார். 

சைவ பிரியரான அபிராமி எடை குறைத்தது முழுக்க முழுக்க ஜிம் மற்றும் வொர்க்-அவுட் மூலமாகத்தான் என்றும் கூறியுள்ளார். 

Post a Comment