பாலா படத்தில் விஜய்சேதுபதி!

அருண்விஜய் நடித்த 'வணங்கான்' படத்துக்கு அடுத்த படத்தை இயக்காமல் அமைதியாக இருக்கிறார் பாலா. ஒரு தொழிலதிபர் மகனை கொண்டு படம் இயக்குகிறார் என கூறப்பட்டது. அது நடக்கவில்லை. இப்போது அவரின் அடுத்த படத்தில் விஜய்சேதுபதி நடிக்கிறார் என்று தகவல்கள் கசிகின்றன. இந்த கூட்டணி அமைய இயக்குனர் மாரிசெல்வராஜ்தான் முயற்சி செய்து இருக்கிறாராம்.

கடந்த சில மாதங்களாக இந்த படத்துக்கான பணிகளில் அவரும் இருக்கிறார். அவர் கதையை பாலா இயக்கலாம் அல்லது அந்த படத்தின் கதை விவாதத்தில் மாரிசெல்வராஜ் இருந்து இருக்கலாம் என்கிறார்கள். இப்போது தியாகராஜன் குமாரராஜா இயக்கும் 'பாக்கெட் நாவல்' படத்தில் விஜய்சேதுபதி நடித்து வருகிறார். அடுத்து பாலாஜி தரணிதரன் இயக்கும் படம் உட்பட சில படங்களையும் கையில் வைத்து இருக்கிறார். 

அடுத்ததாக மணிரத்னம் படத்தில் நடிக்கப்போகிறார். அந்த படத்தை முடித்துவிட்டு பாலா இயக்கும் படத்துக்கு செல்வார் என தகவல். இதற்கிடையே 'வாழை 2' படத்தை இயக்கப்போகிறார் மாரிசெல்வராஜ். 

Post a Comment