ஆன்​மிக கதையை மையப்படுத்தி உருவாகும் ‘தத் த்வம் அஸி’

வைபவ், மீனாட்சி கோவிந்​த​ராஜன் முதன்மை கதா​பாத்திரங்களில் நடிக்​கும் படம், ‘தத் த்வம் அஸி’. மலை​யாளத்​தில் வரவேற்​பைப் பெற்ற ‘மாளி​கப்​புரம்’ படத்தை இயக்​கிய விஷ்ணு சசி சங்​கர் இதை இயக்​கு​கிறார். அரவிந்த் ஆகாஷ், ஆடு​களம் நரேன் உள்​ளிட்ட பலர் முக்​கிய கதா​பாத்​திரங்​களில் நடிக்கின்றனர்.

இந்​தப் படத்தை ஜேகே சரவணா மற்​றும் ஜேகே சதீஷ் தயாரிக்கின்​றனர். பிரேம் ஜி அமரன் இசை அமைக்​கிறார். யுவன் செல்வா ஒளிப்​ப​திவு செய்​யும் இப்​படத்​தின் படப்​பிடிப்பு சென்னையில் தொடங்​கியது. இயக்​குநர் வெங்​கட் பிரபு கிளாப் அடிக்க, பொன்​ராம் கேம​ராவை ஆன் செய்து படக்​குழுவை வாழ்த்தி​னார்.

“பக்​தி, நம்​பிக்​கை, ஆன்​மிக உணர்​வு​களை மைய​மாகக் கொண்​டு, அதனுடன் ஆக் ஷன் மற்​றும் உணர்ச்சி கலந்த பொழுது​போக்கு அம்​சங்​களு​டன் இப்​படம் உரு​வாகிறது. அனைத்து தரப்பினரையும் கவரும் வகை​யில் இப்​படத்​தின் திரைக்​கதை வடிவ​மைக்​கப்​பட்​டுள்​ளது” என படக்​குழு தெரி​வித்​துள்​ளது. இந்த வருடம் ஐயப்ப மண்டல காலத்தை முன்​னிட்டு படத்தை வெளியிடத் திட்​ட​மிட்​டுள்​ளனர். 

Post a Comment