நந்தினி ரெட்டி இயக்கத்தில் சமந்தா தயாரித்து நடித்துள்ள படம் மா இண்டி பங்காரம். இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. அதில், புதிதாக திருமணமான பெண்ணாக அவர் நடித்திருந்தார்.
அதோடு புடவை அணிந்தபடி சண்டைக் காட்சிகளில் சமந்தா நடித்த இந்த டிரைலர் ரசிகர் மத்தியில் நேர்மறையான வரவேற்பு பெற்றது. இப்படம் ஜூன் 19ஆம் தேதி திரைக்கு வருகிறது. ஆனால் இதே நாளில் தெலுங்கில் டிரான்ஸ்பார்மர் திரு மூர்த்துலூ, தீவானா, பாலன் போன்ற படங்களும் வெளியாகிறது.
இந்த படங்கள் சமந்தாவின் மா இண்டி பங்காரம் படத்திற்கு பெரிய போட்டியாக இல்லாவிட்டாலும் கூட சமந்தா படத்திற்கான வசூலை பாதிக்க கூடிய அளவுக்கு இருக்கும் என்று டோலிவுட்டில் ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. குறிப்பாக, சமந்தா தயாரித்த சுபம் என்ற படத்தில் நடித்திருந்த ஹர்ஷித் ரெட்டி நடித்திருக்கும் தீவானா படத்திற்கு பாக்ஸ் ஆபிஸில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் ஒருவேளை அந்த படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்று விட்டால் அது சமந்தாவின் மா இண்டி பங்காரம் படத்திற்கு பெரிய போட்டியாக அமையும் என்று கூறுகிறார்கள்.
