நடிகர் பிரதீப் ரங்கநாதன் தயாரிப்பாளராக முதல் படத்தைத் தயாரித்து வருகிறார்.
பிரதீப் ரங்கநாதனின் ‘லவ் டுடே’, ‘டிராகன்’ மற்றும் ‘டியூட்’ ஆகிய திரைப்படங்கள் தொடர்ந்து ரு.100 கோடிக்கும் மேல் வசூலித்து வெற்றி பெற்றுள்ளன. இறுதியாக நடித்த எல்ஐகே திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
அடுத்ததாக, ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் புதிய திரைப்படத்தை இயக்குவதுடன் அதில் நாயகனாகவும் பிரதீப் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், பிரதீப் ரங்கநாதனே தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார். இதன் முதல் திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. நாயகியாக மமிதா பைஜூ நடிப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
