அதிரடி திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மலையாள சினிமாவில் பன்முகத்தன்மை கொண்ட திரைக்கலைஞரான பாசில் ஜோசஃப் தன் தயாரிப்பு நிறுவனத்தில் அதிரடி படத்தை தயாரித்துள்ளார்.
இந்தப் படத்தினை அருண் அனிருதன் எழுதி இயக்க, நடிகர்கள் பாசில் ஜோசஃப், டொவினோ தாமஸ், ரியா ஷிபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
கல்லூரி பின்னணியில் உருவான இந்தப் படத்தில் நாயகனாக பாசில் ஜோசஃப் நடிக்க, வில்லனாக டொவினோ தாமஸ் நடித்துள்ளார்.
அண்மையில் திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக இதுவரை ரூ. 75 கோடி வசூலித்துள்ளது. கடந்த மே 22 ஆம் தேதி தமிழிலும் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.
இந்த நிலையில், அதிரடி திரைப்படம் ஜூன் 19 ஆம் தேதி சோனி லைவ் ஓடிடியில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
