விம்பிள்டன் 2026: அனன்யா பாண்டே, ஸ்ரீலீலா மற்றும் இந்திய நட்சத்திரங்களின் அசத்தல் ஃபேஷன் லுக்ஸ்!

 


விம்பிள்டன் 2026 டென்னிஸ் போட்டித் தொடர், உலகத் தரம் வாய்ந்த விளையாட்டுக்கு மட்டுமல்லாமல், உலகப் புகழ்பெற்ற ஃபேஷன் களமாகவும் மாறியுள்ளது. 

இம்முறை மைதானத்தில் டென்னிஸ் பந்துகள் பறந்ததை விட, இந்திய நட்சத்திரங்கள் தங்களது அசத்தலான ஆடைகளில் வலம் வந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது தான் சமூக ஊடகங்களில் ஹாட் டாப்பிக்.

விம்பிள்டன் அரங்கில் தனது முதல் அறிமுகத்தை பிரம்மாண்டமாக பதிவு செய்தார் அனன்யா. அவர் அணிந்திருந்த அடர் சிவப்பு நிற உடை அனைவரின் கண்களையும் கவர்ந்தது.

விம்பிள்டன் போட்டிகளுக்கு வழக்கமாக செல்லும் பிரியங்கா சோப்ரா, இந்த முறை இரண்டு விதமான லுக்ஸில் அசத்தினார். முதல் 

தோற்றத்தில் ஆஃப்-வைட் நிற உடையில் தலையில் ஸ்டைலான 'பண்டானா' அணிந்து மாடர்னாக காட்சியளித்தார்.

இரண்டாவது தோற்றத்தில், நேர்த்தியான வெள்ளை நிற ஹால்டர்-ஸ்டைல் ஆடையில் வந்து ரசிகர்களைக் கவர்ந்தார்.

 அவருடன் முன்னாள் அவருடன் முன்னாள் பிரபஞ்ச அழகி லாரா தத்தா நீல நிற சம்மர் டிரஸ்ஸில் இணைந்து போஸ் கொடுத்தார்.

 நடிகை ஆயிஷா கானும் விம்பிள்டன் 2026-ல் சிவப்பு நிற ஆடையில் வந்து மைதானத்தில் தனித்துத் தெரிந்தார்.


Post a Comment