ஹிப்ஹாப் ஆதியின் 'மீசைய முறுக்கு 2': செப்டம்பரில் திரையரங்குகளில் ரிலீஸ்?

 


இளம் ரசிகர்களின் பேராதரவை பெற்ற ஹிப்ஹாப் தமிழா ஆதியின் 'மீசைய முறுக்கு' திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த சுவாரசியமான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

கடந்த 2017-ஆம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான 'மீசைய முறுக்கு' திரைப்படத்தின் மூலம் ஆதி இயக்குநராகவும் நடிகராகவும் தமிழ் சினிமாவில் தடம் பதித்தார்.

 தற்போது கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்திற்குப் பிறகு, இப்படத்தின் இரண்டாம் பாகமான 'மீசை மீசை முறுக்கு 2' உருவாகி வருகிறது.

நம்பத்தகுந்த சினிமா வட்டாரங்களின்படி, இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 

இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே மீதமுள்ள நிலையில், ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முழுமையாக நிறைவடைய உள்ளது.

தயாரிப்பு தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளிவராத நிலையில், படத்தை வரும் செப்டம்பர் மாதத்தில் திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.


Post a Comment