நடிகர் அகில் அக்கினேனி நடிப்பில், முரளி கிஷோர் அபுரு இயக்கத்தில் கடந்த 10ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியான திரைப்படம் இது.
கலவையான விமர்சனங்களைப் பெற்றபோதிலும், திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இத்திரைப்படத்தின் முதல் 3 நாட்கள் வார இறுதி வசூல் சாதனை குறித்து தயாரிப்பாளர் நாக வம்சி சூரியதேவரா தனது எக்ஸ் தளத்தில் அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மனம் எண்டர்டெயின்மெண்ட்ஸ்' மற்றும் 'சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ்' ஆகிய இரு முன்னணி நிறுவனங்களும் இணைந்து ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு 'லெனின்' திரைப்படத்திற்காகக் கைகோர்த்தன.
நடிகர் அகிலுக்கு ஒரு பிரம்மாண்டமான பிளாக்பஸ்டர் வெற்றியைக் கொடுக்க வேண்டும், படத்தின் பயணத்தில் இணைந்த ஒவ்வொருவரும் பெருமைப்பட வேண்டும் என்ற ஒற்றை இலக்குடன் இந்தத் திரைப்படம் தொடங்கப்பட்டதாக நாக வம்சி குறிப்பிட்டுள்ளார்.
