இசையமைப்பாளர் அனிருத்திற்கும், Sunrisers Hyderabad CEO காவ்யா மாறனுக்கும் திருமணம் என்கிற செய்தி தொடர்ந்து இணையத்தில் உலா வந்தது.
ஒரு பக்கத்தில் இது வதந்தி என கூறி வந்த நிலையில், நடிகர் YG மகேந்திரன், அனிருத் - காவ்யா மாறன் திருமண செய்தி உண்மை என கூற, இவர்களுடைய கல்யாணம் உறுதி செய்யப்பட்டது.
ஆனாலும் இதுவரை அனிருத் தரப்பிலிருந்தோ அல்லது காவ்யா மாறன் தரப்பிலிருந்தோ எந்த ஒரு அறிவிப்பும் வெளிவரவில்லை.
கடந்த சில நாட்களுக்கு முன் அனிருத் - காவ்யா மாறன் திருமணம் நவம்பர் மாதம் இரண்டாம் வாரத்தில் நடக்கவிருப்பதாக தகவல் வெளிவந்தது.
இந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள தகவல் என்னவென்றால், இவர்களுடைய திருமணம் நவம்பர் 12-ஆம் தேதி நடக்கப்போவதாக கூறப்படுகிறது.
சீஷெல்ஸ் தீவில் இந்த திருமணம் நடப்பதாகவும், நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மற்றும் திரை பிரபலங்கள் மட்டுமே இதில் கலந்துகொள்வார்கள் என்றும் தகவல் தெரிவிக்கின்றனர்.

