திரிஷாவின் ஆடையில் ஒரே நாற்றம்.. 3வது முறையாக பிரச்னையாம்..



திரிஷா நடிப்பில் இந்த வருடம் கருப்பு திரைப்படம் வெளியானது. படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகி மொத்தம் 300 கோடி ரூபாய்வரைக்கும் வசூலித்தது. 

அடுத்ததாக விஸ்வம்பரா திரைப்படம் அக்டோபர் 16ஆம் தேதி ரிலீஸாகிறது. இவை தவிர்த்து இன்னும் சில படங்களில் அவர் கமிட்டாகியிருக்கிறார். இந்நிலையில் திரிஷா ஒரு ஆடை நிறுவனத்தை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கி போஸ்ட் போட்டிருக்கிறார்.

தென்னிந்திய சினிமாவின் டாப் நடிகைகளில் ஒருவர் திரிஷா. சிறிய கதாபாத்திரத்தில் சினிமாவில் அறிமுகமாகி இப்போது யாராலும் அசைக்க முடியாத இடத்துக்கு நகர்ந்திருக்கிறார் அவர்.

 வயது 40க்கு மேல் ஆனாலும் இன்னமும் அதே எனர்ஜியோடு நடிப்பதும், அழகோடும் இருப்பதும் அனைவருக்கும் ஆச்சரியத்தைத்தா கொடுத்திருக்கிறது. 

இப்போதும் பெரிய ஹீரோக்களின் சாய்ஸ்களில் திரிஷாவின் பெயர் இருப்பதை வைத்தே தெரிந்துகொள்ளலாம் அவருக்கான கிரேஸ் இன்னமும் குறையவில்லை.

கடந்த வருடத்தில் திரிஷா மொத்தம் மூன்று திரைப்படங்களில் நடித்தார். மூன்றுமே பெரிய படங்கள்தான். அவற்றில் அஜித்தின் குட் பேட் அக்லி மட்டும்தான் ஓரளவுக்கு சொல்லிக்கொள்ளும்படி ஹிட்டடித்தது.

 விடாமுயற்சியும், தக் லைஃப்பும் இருக்கும் இடமே தெரியாமல் காணாமல் போயின. இருப்பினும் திரிஷாவின் நடிப்புக்கும், அழகுக்கும் அந்தப் படங்களில் ரசிகர்களிடம் அமோக ரெஸ்பான்ஸ் இருந்தது. 

இந்த வருடத்தில் நடித்த கருப்பு படமோ மெகா ஹிட்டாகி மொத்தம் 300 கோடி ரூபாய் வரை அள்ளியது.


Post a Comment