தமிழக முதல்வர் விஜய்யை நடிகை சிம்ரன் நேற்று சந்தித்தார்.
தமிழக முதல்வராக விஜய் பதவியேற்ற பின் பல்வேறு அரசியல் தலைவர்களும்,. நடிகர்களும் அவரை நேரில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், நடிகை சிம்ரன் இன்று குடும்பத்தினருடன் முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
விஜய் - சிம்ரன் இணைந்து நேருக்கு நேர், பிரியமானவளே, துள்ளாத மனமும் துள்ளும், உதயா, ஒன்ஸ் மோர், யூத் போன்ற படங்களில் இணைந்து நடித்துள்ளனர். ரசிகர்களால் மிகவும் கொண்டாடப்பட்ட திரைப்பட ஜோடியான இவர்கள் நீண்டகால நண்பர்களாகவும் இருந்து வருகின்றனர்.
முதல்வர் விஜய்யைச் சந்தித்தபின் சிம்ரன் தனது சமூக வலைதளப் பதிவில், “பல ஆண்டுகள் ஒன்றாக திரையில் நடித்த பிறகு, மாண்புமிகு முதல்வராக விஜய்யை குடும்பத்துடன் சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி. பலரையும் அவரின் வசம் ஈர்க்கும் அவரது அன்பும், பணிவும், நேர்மையும் அப்படியே மாறாமல் இருக்கின்றன.
நமது மாநிலத்தின் முன்னேற்றம் பற்றிய அவரது பேரார்வமும் தொலைநோக்குப் பார்வையும் ஊக்கமளிப்பதாக உள்ளன. தமிழகத்தை முன்னோக்கி வழிநடத்திச் செல்ல அவருக்கு என் வாழ்த்துகள்” எனப் பதிவிட்டு குடும்பத்தினருடன் எடுத்தப் புகைப்படங்களைப் பகிர்ந்திருந்தார்.

