மகாநதி தொடரின் கிளைமேக்ஸ் படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வைரலாகியுள்ளன.
விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் மகாநதி தொடரின், படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்தது.
கடந்த 2023 ஜனவரி முதல் ஒளிபரப்பாகிவரும் மகாநதி தொடர், தற்போது 850 நாள்களைக் கடந்து ஒளிபரப்பாகி வருகிறது.
இந்தத் தொடரில் நடிகை லஷ்மி பிரியா நாயகியாகவும், சுவாமிநாதன் நாயகனாகவும் நடித்து வருகின்றனர். மேலும், இந்தத் தொடரில் ருத்ர பிரவீன், ஸ்வேதா குமார், சுஜாதா சிவகுமார் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். இத்தொடரை பிரவீன் பென்னட் இயக்கி வருகிறார்.
கடைசிநாள் படப்பிடிப்பின்போது நடைபெற்ற நிகழ்ச்சியில், இதில் நடித்த அனைத்து நடிகர்களும் பங்கேற்றனர். கேக் வெட்டி கொண்டாடினர்.
இந்த நிகழ்ச்சியில் ருத்ர பிரவீன், ஸ்வேதா குமார், லஷ்மி பிரியா, சுவாமிநாதன் ஆகியோர் மகாநதி தொடர் மூலம் கிடைத்த அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். இந்நிகழ்வில் பலரும் கண்ணீர் விட்டு விடியோ இணையத்தில் வைரலானது.
இந்தத் தொடரில் இருந்து விலகிய கமருதீனும் நிறைவு நாள் படப்பிடிப்பில் பங்கேற்றார்.
மகாநதி தொடரின் கடைசி நாள் படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவி வைரலாகியுள்ளன.
