ஹோமரின் மகாகவியமான ஒடிஸியை தழுவி ஹாலிவுட்டின் ஜாம்பவான் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் 'தி ஒடிஸி' படத்தை இயக்கியுள்ளார்.
பேட்மேன்: தி டார்க் நைட்’, ‘இன்டர்ஸ்டெல்லார்’, ‘இன்செப்ஷன்’, ‘தி பிரெஸ்டீஜ்’ உள்ளிட்ட படங்கள் மூலம் உலகை பிரிமிக்க வைத்த நோலன் கடைசியாக அணுகுண்டை தயாரித்த ஓபன்ஹைமரின் வாழ்வை தழுவி அவரது பெயரில் சிலியன் மர்பியை வைத்து படம் இயக்கியிருந்தார்.
இப்படம் கடந்த வருட ஆஸ்காரில் பல விருதுகளை வென்றது.
கிரேக்கப் புராணத்தில், டிரோஜன் போர் முடிவடைந்த பிறகு, இத்தாக்காவின் மன்னரான 'ஒடிஸியஸ்' தனது ராஜ்ஜியத்திற்கு திரும்புவதற்காக மேற்கொள்ளும் அபாயகரமான பயணமே இப்படத்தின் கதையாகும்.
இதில் பிரபல ஹாலிவுட் நடிகர்களான மெட் டாமன், டாம் ஹாலண்ட், ஜெண்ட்யா, அண்ணா ஹாத்வே, எலியாட் பேஜ் ஆகியோர் நடித்துள்ளனர்.
மாட் டேமன் ஒடிஸியஸாகவும், ஆன் ஹேத்வே அவரது மனைவி பெனிலோப்பாகவும் நடித்துள்ளனர். மகனாக டாம் ஹாலண்ட் நடித்துள்ளார்.
