கடல் அலைக்குள் சிக்கிய அனுஷ்கா: பத்திரமாக மீட்ட போலிசார்


 

சென்னை மெரினாவில் கடல் அலையில் சிக்கி கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்ட உக்ரைன் நாட்டை சேர்ந்த இளம்பெண்ணான அனுஷ்காவை கடலோர காவல் படையின் மெரினா உயிர்காக்கும் குழுவினர் பத்திரமாக மீட்டனர்.

உக்ரைனை சேர்ந்த அனுஷ்கா(வயது 24) இந்தியாவிற்கு சுற்றுலா வந்துள்ளார், இங்கே பல்வேறு மாநிலங்களை சுற்றிப்பார்த்துவிட்டு சென்னையில் வந்து தங்கியுள்ளார்.

மெரினா கடற்கரைக்கு சென்ற போது கடலில் குளித்துக் கொண்டிருந்தார், அப்போது ராட்சத அலை வந்ததும் அவர் அலையால் உள்ளே இழுக்கப்பட்டு சுமார் 100 மீற்றர் தூரம் வரை கடலுக்குள் சென்று தத்தளித்தார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் உடனடியாக மீட்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக விரைந்து வந்த குழுவினர் கடலுக்குள் சென்று அனுஷ்காவை பத்திரமாக மீட்டனர்.

தொடர்ந்து அவருக்கு முதலுதவி சிகிச்சை வழங்கப்பட்டு பத்திரமாக குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் போலிசார் அனுப்பி வைத்தனர்.


Post a Comment