இலங்கைத் திரைத்துறையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் புதிய சிங்களத் திரைப்படமான "காந்தாரா" (GANDHARA) படத்தின் படப்பிடிப்பு பணிகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக (Shoot Wrap) படக்குழுவினர் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளனர்.
ஆர்எஃப் இன்டர்நேஷனல் (RF International) தயாரிப்பில் உருவாகும் இத்திரைப்படத்தை பிரபல இயக்குனர் தினேஷ் கனகராஜ் (Thinesh Kanagaraj) இயக்கியுள்ளார்.
முழுக்க முழுக்க ஆர்வம், அர்ப்பணிப்பு மற்றும் மறக்க முடியாத நினைவுகளுடன் இந்த சினிமாப் பயணம் நிறைவடைந்துள்ளதாக படக்குழுவினர் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளனர்.
தற்போது படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், 'போஸ்ட் புரொடக்ஷன்' (Post-production) பணிகள் மிக விரைவில் ஆரம்பமாகவுள்ளன.
இலங்கை சினிமா ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இத்திரைப்படம், விரைவில் திரைக்கு வரவிருப்பதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
