தர்மன் ஷூட்டிங்.. கால் நடுங்கும் சார்.. ரஜினியிடம் கொட்டி தீர்த்த அஷ்வத் மாரிமுத்து



ரஜினிகாந்த்தை வைக்கும் கமல்ஹாசன் தயாரிக்கும் படத்தை அஷ்வத் மாரிமுத்து இயக்குகிறார். படத்துக்கு தர்மன் என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. 

சென்னையில் தொடங்கியிருக்கும் ஷூட்டிங்கில் ரஜினிகாந்த் ஆர்வத்துடன் கலந்துகொண்டிருக்கிறார். 

இந்நிலையில் சமீபத்தில் ஊடகம் ஒன்றின் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அஷ்வத் மாரிமுத்து; தர்மன் பட ஷூட்டிங்கில் நடந்ததை பகிர்ந்திருக்கிறார்.

ரஜினியும், கமலும் இணைந்து ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார்கள். அதற்கும் முன்னதாக ரஜினியை வைத்து கமல் ஒரு படத்தை தயாரிக்க முடிவெடுத்தார்.

முதலில் அந்தப் படத்துக்கு கே.எஸ்.ரவிக்குமாரை இயக்குநராக போட நினைத்தார்கள். ஆனால் அது ஒத்துவராததால் சுந்தர்.சி உள்ளே வந்தார். 

அறிவிப்பும் வெளியானது. இருப்பினும் அவரும் வெளியேற; சிபி சக்கரவர்த்தி உள்ளே வந்து வெளியே சென்றுவிட்டார். 

இப்படி இயக்குநர்கள் உள்ளே வருவதும், போவதுமாக இருப்பதால் இந்தப் படத்தின் கதி என்னாகுமோ என்ற அச்சம் இருந்தது.

ஒருவழியாக அஷ்வத் மாரிமுத்துவை ஃபிக்ஸ் செய்துவிட்டார்கள். 

டிராகன் படம் வெற்றியடைந்தபோது ரஜினியை சந்திக்கையில் சொன்ன லைனைத்தான் அஷ்வத் டெவலப் செய்திருக்கிறாராம்.

 படத்துக்கு அனிருத் இசையமைக்க; சிம்ரன், ராஷி கண்ணா உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். மேலும் மீனாட்சி சௌத்ரியும் இதில் கமிட்டாகியிருப்பதாக தெரிகிறது.





Post a Comment