முதல் நாளே கேப்டனுடன் மோதல்..! பிக்பாஸ் வீட்டில் வெடித்த சண்டை”




 பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளிலேயே போட்டியாளர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

நேற்று பிரம்மாண்டமாக தொடங்கிய இந்த நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். இந்த சீசனில் மொத்தம் 19 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர்.

நிகழ்ச்சி தொடங்கிய உடனேயே போட்டிகளும் விறுவிறுப்பாக ஆரம்பித்துள்ளன. அந்த வகையில் நடைபெற்ற கேப்டன் போட்டியில் சாத்விகா வெற்றி பெற்று, முதல் வார கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதையடுத்து வெளியான இரண்டாவது மற்றும் மூன்றாவது புரோமோக்களில் ‘ஜனநாயக அறை’ தொடர்பான காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

கேப்டனைத் தவிர மற்ற போட்டியாளர்கள் இரண்டு அணிகளாகப் பிரிந்து விவாதிக்க வேண்டும் என பிக்பாஸ் அறிவுறுத்தியுள்ளார்.

அப்போது கேப்டன் சாத்விகாவுக்கும் போட்டியாளர் முனியம்மாவுக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் இடையிலான வாக்குவாதம் தீவிரமடைந்த நிலையில், முனியம்மா அந்த அறையில் இருந்து வெளியேறுவதாக கூறிவிட்டு அங்கிருந்து செல்கிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளிலேயே ஏற்பட்டுள்ள இந்த மோதல் தொடர்பான காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

இதனால் அடுத்தடுத்த நாட்களில் பிக்பாஸ் வீட்டில் இன்னும் பல சுவாரஸ்யமான சம்பவங்கள் அரங்கேறலாம் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

Post a Comment