“The Mummy” OTT ரிலீஸ் திகதி அறிவிப்பு..! திகில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்

இயக்குநர் லீ க்ரோனின் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘Lee Cronin’s The Mummy’ திரைப்படம் தற்போது ஓ.டி.டி. வெளியீட்டுக்கு தயாராகியுள்ளது.

கடந்த ஏப்ரல் 17-ஆம் திகதி திரையரங்குகளில் வெளியான இப்படத்தில் ஜாக் ரெய்னர், லாயா கோஸ்டா, மே காலமாவி, நடாலி கிரேஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ஒரு பத்திரிகையாளரின் இளம் மகள் பாலைவனத்திற்கு சென்றபோது காணாமல் போகிறார். பல ஆண்டுகளுக்குப் பிறகு, சுமார் 8 ஆண்டுகள் கழித்து அவர் மீண்டும் குடும்பத்திடம் திரும்புகிறார்.

மகளை மீண்டும் பார்த்த மகிழ்ச்சியில் குடும்பத்தினர் இருக்கும் நிலையில், அவரது நடவடிக்கைகளில் ஏற்படும் விசித்திரமான மாற்றங்கள் அவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. அதன்பிறகு கதை திகில் மற்றும் மர்மம் நிறைந்த பாதையில் செல்கிறது.

பழமையான சாபம், மர்மமான சம்பவங்கள் மற்றும் அதிரடியான காட்சிகளுடன் உருவாகியுள்ள இப்படம் தற்போது ஓ.டி.டி.யில் வெளியாக உள்ளது.

அதன்படி, ‘Lee Cronin’s The Mummy’ திரைப்படம் செப்டம்பர் 17-ஆம் திகதி ஜியோஹாட்ஸ்டார் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகிறது.

இதனால் ஹாரர் திரைப்பட ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Post a Comment