கார்த்தி நடிப்பில், இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் உருவாகியுள்ள “சர்தார் 2” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது.
கடந்த 2022ஆம் ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளியான “சர்தார்” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்த நிலையில், அதன் தொடர்ச்சியாக “சர்தார் 2” உருவாகியுள்ளது.
இப்படத்தில் கார்த்தியுடன் மாளவிகா மோகனன், ரஜிஷா விஜயன், ஆஷிகா ரங்கநாத், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.
மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
இந்நிலையில், “சர்தார் 2” திரைப்படத்தின் முதல் நாள் உலகளாவிய வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, இப்படம் முதல் நாளில் உலகளவில் சுமார் ரூ.8 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.


