நடுவீதியில் சிவகார்த்திகேயன் செய்த செயல் வியந்து பார்த்த மக்கள்

கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் புதிய திரைப்படம் “சேயோன்”.

மதுரையை மையமாகக் கொண்டு உருவாகி வரும் இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது மதுரையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், படப்பிடிப்பின் இடைவேளையில் மதுரை விளக்குத்தூண் பகுதியில் உள்ள பிரபலமான ஜிகர்தண்டா கடைக்கு சிவகார்த்திகேயன் திடீரென சென்றுள்ளார்.

அவர் ஜிகர்தண்டா சாப்பிட வந்த தகவல் அறிந்ததும், அப்பகுதியில் இருந்த பெண்கள், குழந்தைகள் மற்றும் ரசிகர்கள் அவரைச் சூழ்ந்து கொண்டனர்.

அப்போது ரசிகர்களிடம் மிகவும் எளிமையாகவும் கனிவாகவும் சிவகார்த்திகேயன் பேசினார். மேலும், அங்கிருந்த ஒரு குழந்தைக்கு அன்புடன் முத்தமிட்ட அவர், கூடியிருந்த பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு தனது சொந்த செலவில் ஜிகர்தண்டாவும் வாங்கிக் கொடுத்துள்ளார்.

பொதுமக்களுடன் எந்தவித தயக்கமும் இல்லாமல் இயல்பாக பழகிய சிவகார்த்திகேயனின் இந்த செயல் மதுரை மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

தற்போது சிவகார்த்திகேயன் ஜிகர்தண்டா கடையில் ரசிகர்களுடன் இருக்கும் காணொளி சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. அவரது எளிமையையும் அன்பையும் பார்த்த இணையவாசிகள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

Post a Comment