நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தைச் சட்டவிரோதமாக இணையதளங்கள் மற்றும் டிஜிட்டல் தளங்களில் வெளியிடத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தயாரிப்பு நிறுவனம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி பி.பி. பாலாஜி, இந்தத் தடையுத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
திரைப்படங்கள் வெளியான சில நிமிடங்களிலேயே சட்டவிரோதமாக இணையதளங்களில் பதிவேற்றப்படுவதால், தயாரிப்பு நிறுவனங்கள் பெரும் நிதி இழப்பைச் சந்திப்பதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்டோர் நடித்துள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம், ஒக்டோபர் 15ஆம் திகதி உலகளாவிய ரீதியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், திரைப்படத்தை அனுமதியின்றி இணையதளங்கள் மற்றும் டிஜிட்டல் தளங்களில் பதிவேற்றுவதையும் வெளியிடுவதையும் தடுக்கும் நோக்கில் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
