தமிழக முதல்வர் விஜய்யுடனான சந்திப்பு குறித்து நடிகர் விஜய் தேவரகொண்டா வெளியிட்டுள்ள நெகிழ்ச்சியான பதிவு சமூக வலைத்தளங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
தென்னிந்தியத் திரையுலகில் முன்னணி நடிகராக விளங்கும் விஜய் தேவரகொண்டா, நடிகரும் தமிழக முதல்வருமான விஜய்யைச் சந்தித்த அனுபவத்தைத் தனது சமூக வலைத்தளப் பதிவில் பகிர்ந்துள்ளார்.
அந்தப் பதிவில், “அன்புக்குரிய தளபதி விஜய் சாருடன் மிகவும் அழகான தருணங்களைக் கழித்தேன். நீண்ட நாட்களுக்குப் பிறகும் மிகுந்த அன்புடன் எங்களை வரவேற்று, வாழ்க்கை, வேலை மற்றும் உலகம் குறித்த தனது தனிப்பட்ட அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். ஒரே சந்திப்பில் சார் எனக்குப் பிடித்தமானவராகிவிட்டார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
விஜய் தேவரகொண்டாவின் இந்தப் பதிவு, விஜய் மீதான அவரது அன்பையும் மரியாதையையும் வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, இரு நடிகர்களின் ரசிகர்களும் இந்தப் பதிவைப் பகிர்ந்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். விஜய்யுடனான சந்திப்பு குறித்து விஜய் தேவரகொண்டா பகிர்ந்துள்ள இந்த அனுபவம் தற்போது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளது.
