பிக் பாஸ் 10ஆம் சீசன் தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகிறது. போட்டியாளர்களுக்கு இடையிலான மோதல்கள் மட்டுமின்றி, நிகழ்ச்சியின் தொகுப்பாளர் விஜய் சேதுபதி பேசும் கருத்துகளும் அவ்வப்போது சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன.
வழக்கம்போல இந்த சீசனிலும் போட்டியாளர்களுக்கு இடையே தொடர்ந்து பிரச்சினைகளும் மோதல்களும் இடம்பெற்று வருகின்றன.
இந்த நிலையில், ரூ.5 லட்சம் பணப்பெட்டியை பெற்றுக்கொண்டு குமரன் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குமரனின் இந்த முடிவு பிக் பாஸ் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
