இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் சோபிதா துலிபாலா, நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
திருமணத்திற்குப் பின்னரும் தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வரும் சோபிதா துலிபாலா, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சி மற்றும் அதன் பயன்பாடு குறித்து தனது கருத்தை பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், தற்போது தான் ChatGPT உள்ளிட்ட செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களுடன் மிகவும் நெருக்கமாகிவிட்டதாகவும், தன்னைப் போலவே பெரும்பாலானோர் அதில் மூழ்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
AI-யின் பயன்பாடு காரணமாக அன்றாட வாழ்க்கையில் சில முக்கியமான விடயங்களுக்கு கூட போதிய நேரம் ஒதுக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும், சில முக்கிய நிகழ்வுகளுக்குக்கூட நேரம் ஒதுக்க முடியவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
AI பயன்பாடு சரியா, தவறா என்பது வேறு விடயம் என்றாலும், எந்தவொரு விடயமும் எல்லை மீறிச் செல்லக்கூடாது என்பதில் தான் உறுதியாக இருப்பதாக சோபிதா துலிபாலா தெரிவித்துள்ளார்.
