சினிமாவில் மட்டுமல்ல... நிஜ வாழ்க்கையிலும் ரசிகர்களை கவர்ந்த நட்சத்திர ஜோடி சூர்யா–ஜோதிகா, தங்களது 20 ஆண்டுகால திருமண வாழ்க்கையை வித்தியாசமாகக் கொண்டாடியுள்ளனர்.
இருவரும் மீண்டும் திருமண உறுதிமொழி எடுத்துக்கொண்ட வீடியோவை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
இதுகுறித்து ஜோதிகா வெளியிட்ட பதிவில், இது குறைகளற்ற திருமண வாழ்க்கையின் கொண்டாட்டம் இல்லை என்றும், விட்டுக்கொடுத்தல், புரிதல், தியாகம் மற்றும் ஒருவரையொருவர் நேசித்ததை கொண்டாடும் தருணம் என்றும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
சூர்யா–ஜோதிகா இருவரும் கடந்த 2006ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். அதற்கு முன்பாக ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’, ‘காக்க காக்க’ உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்திருந்தனர்.
20 ஆண்டுகால காதல் வாழ்க்கையை புதிய உறுதிமொழிகளுடன் கொண்டாடிய இந்த ஜோடியின் வீடியோ, தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
