பிக்பாஸ் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்திருந்த பிக்பாஸ் தமிழ் 10வது சீசன், கடந்த செப்டம்பர் 6ஆம் தேதி விஜய் டிவியில் அதிரடி திருப்பங்களுடன் தொடங்கியது.
முதல் நாளிலேயே இதுவரை இல்லாத வகையில் பல புதிய விஷயங்கள் இடம்பெற்றதால், இந்த சீசன் எப்படி செல்லப்போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்தது.
நிகழ்ச்சி தொடங்கிய நாள் முதல் போட்டியாளர்களுக்கு இடையே சண்டை, கருத்து மோதல் என வீடு பரபரப்பாகவே இருந்து வருகிறது.
இதற்கிடையில், சமீபத்திய எபிசோடில் மணிவண்ணன் எலிமினேட் செய்யப்பட்டார்.
இந்த நிலையில், பிக்பாஸ் ரசிகர்களுக்கு தற்போது மற்றொரு அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, லட்சுமி பிரியா அடுத்ததாக பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
லீடர் எலிமினேஷனுக்கான Exit Poll முடிவுகளின் அடிப்படையில் லட்சுமி பிரியா வெளியேற்றப்பட்டதாக தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
எனினும், இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை, இந்தத் தகவலை உறுதி செய்யப்பட்ட எலிமினேஷன் எனக் கூற முடியாது.
100 நாட்கள் ரசிகர்களை என்டர்டெயின் செய்யத் தொடங்கியுள்ள பிக்பாஸ் 10வது சீசனில், அடுத்தடுத்து யார் வெளியேறப் போகிறார்கள் என்பதுதான் தற்போது ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.
