தனுஷ் 56-வது படத்தின் பூஜை! 18 அடி அரிவாளுடன் பிரம்மாண்ட ஏற்பாடு

 நடிகர் தனுஷின் 56-வது படத்தின் பூஜை இன்று சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகே உள்ள மாரநாடு கருப்புசாமி கோவிலில் நடைபெற உள்ளது.

இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கும் இந்தப் படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடிக்கிறார். மேலும், நடிகர் எஸ்.ஜே.சூர்யாவும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

படத்தின் பூஜையில் கலந்துகொள்வதற்காக தனுஷ் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தார். அவருக்கு விமான நிலையத்தில் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தனுஷை சந்தித்த ரசிகர்கள் அவருக்கு மாலை அணிவித்து, வேல் மற்றும் மலர்க்கொத்து வழங்கினர். பின்னர் ரசிகர்களை நோக்கி கையசைத்தபடி தனுஷ் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

இதற்கிடையே, படத்தின் பூஜையை முன்னிட்டு மாரநாடு கருப்புசாமி கோவிலில் 18 அடி உயர அரிவாள் காணிக்கையாக செலுத்தப்பட உள்ளது.

மேலும், ரசிகர்களுக்காக 16 கிடாக்கள் வெட்டி விருந்து வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் தனுஷின் 56-வது படத்தின் தொடக்க நிகழ்வை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Post a Comment