திருமணம் குறித்து தனது வெளிப்படையான கருத்தை நடிகை ஸ்ருதி ஹாசன் பகிர்ந்துள்ளார்.
தனது காதல் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து வெளிப்படையாக பேசும் ஸ்ருதி ஹாசன், கடந்த காலத்தில் காதல் உறவில் இருந்த நிலையில், அந்த உறவு பின்னர் பிரேக்கப்பில் முடிந்ததாக கூறப்படுகிறது.
தற்போது சிங்கிளாக இருப்பதாக கூறிவரும் ஸ்ருதி ஹாசன், சமீபத்திய பேட்டியில் திருமணம் குறித்து பேசியுள்ளார்.
வாழ்க்கையில் ஒரு துணை இருப்பது முக்கியமாக இருக்கலாம் என்றாலும், அதற்காக திருமணம் செய்துகொள்வது அவசியம் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தாய்மை மீது தனக்கு ஆர்வம் இருப்பதாகவும், எதிர்காலத்தில் குழந்தை பெற்றுக்கொள்வது அல்லது குழந்தையை தத்தெடுப்பது குறித்து யோசித்து வருவதாகவும் ஸ்ருதி கூறியுள்ளார்.
திருமணம் என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட முடிவு என்றும், தனது வாழ்க்கையை தனக்கு ஏற்ற வகையில் அமைத்துக்கொள்ள விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
