Posts

விஜய்க்கு போட்டியாக மாறிய சூர்யா


இந்த வருடம் சூர்யாவுக்கு ஒரு செம கம்பேக் ஆண்டாக அமைந்துள்ளது. ‘கருப்பு’ திரைப்படம் உலகளவில் பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றுத் தந்த நிலையில், தொடர்ந்து ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ படமும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், அடுத்ததாக மலையாள இயக்குநர் ஜீத்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘சீன்’ திரைப்படம் தீபாவளி விருந்தாகத் திரைக்கு வரவுள்ளது.

இதற்கிடையில், இப்படத்தின் வியாபாரமும் தற்போது தொடங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, கேரளாவில் இப்படத்தின் விநியோக உரிமையை கோகுலம் சினிமாஸ் சுமார் 10 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

தொடர்ந்து வெற்றிப் படங்களைக் கொடுத்து வரும் சூர்யா, ‘சீன்’ திரைப்படத்தின் மூலமாக தனது மார்க்கெட்டை மேலும் உயர்த்துவாரா? விஜய்யின் மார்க்கெட்டை எட்டிப்பிடிக்கும் அளவுக்கு இந்தப் படம் அமையுமா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Post a Comment