கமலின் அடுத்த பட அறிவிப்புக்கு முன்பே சர்ச்சை!

உலக நாயகன் கமல்ஹாசனின் அடுத்த திரைப்படம் குறித்த அறிவிப்பு இன்று மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ள நிலையில், அதன் விளம்பர வாசகம் தொடர்பில் இயக்குநர் லெனின் பாரதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

‘மேற்கு தொடர்ச்சி மலை’ திரைப்படத்தை இயக்கிய லெனின் பாரதி, இது தொடர்பாகத் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், கதாநாயகர்களை மையப்படுத்திய சினிமாக்களின் தாக்கத்தால் ஏற்கனவே இளைஞர்கள் மத்தியில் வன்முறை உணர்வுகள் அதிகரித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், எவ்வித சமூகச் சிந்தனையுமின்றி, “பலிவாங்கல் ரத்தத்தால் மட்டுமே சரி செய்யப்படும்” என்ற வாசகத்தைத் தனது அடுத்த திரைப்பட விளம்பரத்தில் முன்னிறுத்துவது கண்டனத்திற்குரியது என அவர் தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசனின் புதிய திரைப்பட அறிவிப்பு வெளியாகவுள்ள நிலையில், இயக்குநர் லெனின் பாரதியின் இந்தக் கருத்து கவனத்தைப் பெற்றுள்ளது.

Post a Comment