ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘அண்ணாமலை’ திரைப்படத்தை ரீமேக் செய்து நடிக்க விரும்புவதாக நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் பேசிய அவர், மற்ற நடிகர்களின் படங்களை ரீமேக் செய்வதில் பொதுவாகத் தனக்கு விருப்பமில்லை என்றாலும், ரஜினிகாந்தின் ‘அண்ணாமலை’ படத்தைத் தேர்வு செய்வேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், சிவகார்த்திகேயனின் கருத்துக்கு ரஜினிகாந்தின் மக்கள் தொடர்பாளர் ரியாஸ் கே. அகமத் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ‘அண்ணாமலை’ போன்ற கல்ட் கிளாசிக் திரைப்படங்களை ரீமேக் செய்து அதன் தனித்துவத்தைச் சிதைக்காமல், அவற்றைப் பாதுகாப்பதே சிறந்தது என அவர் கூறியுள்ளார்.
