உறவில் விரிசல் - காஜல் அகர்வால் பகிர்ந்த முக்கிய கருத்து


இன்றைய தலைமுறையினரிடம் பொறுமை குறைந்து வருவதற்கு சமூக வலைதளங்களின் அதிகப்படியான பயன்பாடும் ஒரு காரணமாக இருக்கலாம் என நடிகை காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார்.

பல தம்பதிகள் ஒன்றாக வெளியே சென்றாலும், ஒருவருக்கொருவர் பேசுவதைவிட செல்போன்களிலேயே அதிக நேரம் செலவிடுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் கணவன் – மனைவிக்கிடையேயான நெருக்கம் குறைந்து, உணர்வுபூர்வமான இடைவெளி அதிகரிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், சமூக வலைதளங்களில் காணப்படும் வாழ்க்கையுடன் தங்களது வாழ்க்கையை ஒப்பிடுவதும் தேவையற்ற அழுத்தத்தை ஏற்படுத்துவதாக காஜல் கூறியுள்ளார்.

தானும் தனது கணவரும் வாரத்திற்கு ஒருமுறையாவது செல்போனை ஒதுக்கிவிட்டு, இருவரும் தனியாக நேரம் செலவிடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment