சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்மன்’ திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு வழங்குவதாகக் கூறி மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
‘ஆகாஷ் காஸ்ட்யூம்ஸ்’ என்ற பெயரில் விளம்பரம் வெளியிட்டு, படத்தில் நடிக்க வாய்ப்பு இருப்பதாக சிலரிடம் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும், நடிகர் கார்டுக்காக ரூ.12,500 செலுத்த வேண்டும் என்றும், படத்தில் நடித்தால் ரூ.18.50 லட்சம் வரை சம்பளம் கிடைக்கும் என்றும் ஆசை காட்டப்பட்டதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக கமல்ஹாசனின் உதவியாளர் முரளி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து தேனாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, பணம் வசூலித்தவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
