அசோக் செல்வன் ரசிகர்களுக்கு முக்கிய அப்டேட்

அசோக் செல்வன், ப்ரீத்தி முகுந்தன் நடிப்பில் உருவாகியுள்ள ‘அன்பில் அவன்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது.

ஆர். கார்த்திகேயன் இயக்கியுள்ள இந்தப் படம், இளம் தலைமுறையினரை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது.

முதலில் செப்டம்பர் 25ஆம் திகதி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டு, அக்டோபர் 2ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

காந்தி ஜெயந்தி விடுமுறையை முன்னிட்டு இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அசோக் செல்வன் – ப்ரீத்தி முகுந்தன் கூட்டணியில் உருவாகியுள்ள இப்படத்தின் புதிய ரிலீஸ் தேதி ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.

Post a Comment