விஜய் சேதுபதி பேச்சால் சர்ச்சை! விளக்கம் கொடுத்த விஜய் TV


பிக் பாஸ் 10 நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி பேசிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது அதற்கு விஜய் TV விளக்கம் அளித்துள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் அரசியல், தலைவர் மற்றும் தலைமைத்துவம் குறித்து விஜய் சேதுபதி பேசியிருந்தார்.

அவரது பேச்சு, தமிழக முதலமைச்சர் விஜய்யை மறைமுகமாக விமர்சிக்கும் வகையில் இருப்பதாக சமூக வலைத்தளங்களில் சர்ச்சை எழுந்தது.

இதனைத் தொடர்ந்து விஜய் சேதுபதியையும், நிகழ்ச்சியை ஒளிபரப்பும் விஜய் TV-யையும் பலரும் விமர்சித்து வந்தனர்.

இந்த நிலையில், விஜய் TV தரப்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதில், பிக் பாஸ் ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சி என்றும், அதற்கென தனித்துவமான Format, Theme மற்றும் விளையாட்டு சூழல் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், நிகழ்ச்சிக்குள் இடம்பெறும் சூழ்நிலைகள், விவாதங்கள், கருத்துக்கள் மற்றும் உரையாடல்கள் அனைத்தும் நிகழ்ச்சியின் உள்ளடக்கத்தை மட்டுமே குறிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், பிக் பாஸ் நிகழ்ச்சியில் தெரிவிக்கப்படும் கருத்துக்களை, நிகழ்ச்சிக்கு வெளியே இருக்கும் எந்த ஒரு நபர், அமைப்பு அல்லது கருத்தியலை விமர்சிப்பதாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்றும் விஜய் TV விளக்கம் அளித்துள்ளது.

மேலும், நிகழ்ச்சியில் இடம்பெறும் கருத்துக்கள் வெளியுலகில் நடக்கும் விஷயங்களை விமர்சிப்பதாக எடுத்துக்கொள்ளப்பட்டால், அதனை விஜய் TV பிரதிநிதித்துவப்படுத்துவதாகவோ அல்லது அங்கீகரிப்பதாகவோ கருதக்கூடாது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் விஜய் சேதுபதி பேச்சு தொடர்பான சர்ச்சைக்கு விஜய் TV தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.


Post a Comment