விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா குறித்து அவதூறு: சைபர் கிரைமில் புகார்!

நடிகர்கள் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா குறித்து சமூக வலைதளங்களில் போலிச் செய்திகள் மற்றும் அவதூறுகள் பரப்பப்படுவதாகக் கூறி, ஹைதராபாத் சைபர் கிரைம் பொலிஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

‘காபி வித் கரண்’ நிகழ்ச்சியில் விஜய் தேவரகொண்டா தெரிவித்த கருத்துகளைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் அவருக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்திருந்தன.

இந்நிலையில், இரு நடிகர்களையும் இலக்காகக் கொண்டு போலியான பதிவுகள், திருத்தப்பட்ட திரைப்பிடிப்புகள் மற்றும் ஆள்மாறாட்டச் செயல்கள் இடம்பெறுவதாகப் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நடிகர்களின் மேலாளர் நிஷாந்த் குமார் தலைமையிலான சட்டக் குழு, சம்பந்தப்பட்டவர்களைக் கண்டறிந்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரியுள்ளது.

மேலும், அவதூறு பதிவுகளின் இணைப்புகள் மற்றும் டிஜிட்டல் ஆதாரங்களும் பொலிஸாரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment